புதன், 2 ஜூன், 2010

நெருப்பை அணைத்த பாபா


நெருப்பை அணைத்த பாபா

சாயி பாபா எப்படி ஒரு குயவருடைய மகளை நெருப்பில் இருந்து காப்பாற்றினார் என்பதை நீங்கள் படித்து இருக்கலாம். அதனால் அவருக்கு ஏற்பட்ட ரணத்திற்கு பாகோஜி ஷிண்டே என்ற தொழு நோயாளிதான் மருந்து போட்டு துணியால் கட்டுப் போடுவார். சாயி பாபா சில சமயங்களில் கொதிக்கும் பருப்புத் தண்ணீரையோ இல்லை மற்ற வேக வைக்கும் பண்டங்களையோ தன்னுடைய கைகளினால் கிளறுவது உண்டு. அவருடைய கை மருத்துவக் குணம் கொண்டது என்பதினால் அப்படி செய்யப்பட்ட பண்டங்கள் பலருடைய வியாதிகளையும் குணப்படுத்தி உள்ளானவாம் .

ஒரு முறை என்னுடைய தாத்தாவிற்கு ஒரு கனவு வந்தது। அதில் கடாவு மில் தீப்பிடித்து எறிவது போலத் தோன்றிற்று. என்னுடைய தாத்தா அந்த மில்லில்தான் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். சாப்பிடும் போது என்னுடைய தந்தையிடம் அந்த கனவு குறித்து தாத்தா கூற உடனே அதை மில் சொந்தக்காரரிடம் சொல்ல முடிவு செய்தனர். அந்த காலத்தில் எந்த இன்சூரன்ஸ் பாலிசியை எவரும் சாதாரணமாக எடுக்க மாட்டார்கள். என் எனில் இன்சூரன்ஸ் பாலிசிக்கு தரப்படும் கட்டிணம் வரும் லாபத்தைக் குறைத்துவிடும் என்பதினால் இன்சூரன்ஸ் பாலிசியை எவரும் சாதாரணமாக எடுக்க மாட்டார்கள். ஆனாலும் என்னுடைய தாத்தா மில் சொந்தக்காரரான தரம்சி கடாவு என்பவரை சம்மதிக்க வைத்து சற்று அதிக அளவுக்கு இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வைத்தார்.

இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்து முடிந்த அடுத்த ஐந்து அல்லது ஆறாவது மாதம் அவருக்கு மில்லில் தீ பிடித்து விட்டது என அவசர அழைப்பு வந்தது। அவரும் தரம்சி கடாவுவும் பாபாவை வேண்டிக்கொண்டு உடனேயே கிளம்பி அங்கு போய் சேர்ந்த போது மில்லின் நூற்கும் ஆலைப் பிரிவில் தீ மூண்டு இருப்பது தெரிந்தது. அது மில் முழுவதும் பரவி விட்டால் மில் மொத்தமாக அழிந்து விடும் என்பதினால் இரண்டாவது மாடிக்கு சென்று என்ன செய்வது என மனம் பதபதைத்தவாறு பார்த்துக் கொண்டு இருந்தபோது, அந்த எரிந்து கொண்டு இருந்த நெருப்பின் நடுவில் ஒரு பாகீர் போன்ற உருவில் நின்றுகொண்டு இருந்தவர் நெருப்புடன் போராடிக்கொண்டு அதை அனைத்துக் கொண்டு இருந்ததைக் கண்டனர். நெருப்புக்குள் மனிதரா? அது நம் பாபா போல அல்லவா இருக்கின்றது என என்னுடைய தாத்தா வியந்தபோது அடுத்த ஒரு மணி நேரத்தில் நெருப்பு அணைக்கப்பட்டது. நூற்கும் ஆலைப் பிரிவில் மட்டும் சேதம் இருந்தது. ஆனால் அவர்கள் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து இருந்ததினால் ஏற்பட இருந்த நஷ்டம் தவிர்க்கப்பட்டது. அனைத்தும் நன்கு முடிந்ததும் இருவரும் சீரடிக்குச் கிளம்பிச் சென்று பாபாவிடம் நன்றி கூறினர். தன்னுடைய கால்களில் விழுந்த பாபசாஹெப் தாக்கரை தூக்கி நிறுத்திய பாபா கூறினார் ' வயதானவனே, எழுந்திரு . இந்த துவாரகாமாயியில் இருந்து கொண்டு என்னுடைய பக்தர்களுக்கு ஏற்படும் துயரத்தை துடைக்காமல் இருக்க முடியுமா? உலகில் இந்த மூலையில் அவர்கள் இருந்தாலும் என்னை உதவி கேட்டு அழைக்கும் போது நான் அந்த இடத்திற்கு ஓடிச் சென்று அவர்களுடைய துயர் தீர்ப்பேன்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக