ஞாயிறு, 6 ஜூன், 2010

பாபாவின் தினசரி வாழ்கை முறை

அன்பானவர்களே

இந்த கட்டுரைகளை முன்னமே வாசகர்கள் படித்து இருக்கலாம். நம்முடைய குருவின் சரித்திரத்தை எத்தனைமுறை படித்தாலும் அலுக்காது. அவரைப் பற்றி மேலும் மேலும் அறிந்துகொள்ள ஆவல் பிறக்கும். ஆகவே நான் அவருடைய இந்த கட்டுரைகளை மீண்டும் பிரசுரிகின்றேன்.
சாயி பக்தையான லீலாதர்ஜி என்பவர் இதை எனக்கு அனுப்பி இருந்தார். அதை சாயி பக்தர்கர் வட்டத்திற்கு அனுப்பி இருந்தேன். அனைவரும் அந்த வட்டத்துள் உறுப்பினராக இல்லை என்பதாலும், பலர் இணையதளத்திலேயே படிப்பதினாலும் பலர் இந்த கட்டுரைகளை படித்து இருக்க மாட்டார்கள். ஆகவே அனைவரது நன்மைக்காகவும் இதை 'ப்லொக்கில்' நான் பல பகுதிகளாக பிரசுரிக்கின்றேன். இந்த தமிழாக்கம் ஆங்கிலத்தில் வந்துள்ள ஆறு பாகத்தின் சாரம் . ஏழாம் பாகத்தில் இருந்து வெளிவர உள்ள தொடர்ச்சி இனி ஆங்கிலத்தில் வெளியாகும் போது தமிழிலும் வரும்.

சாயிராம்

BABA’S DAILY ROUTINE
பாபாவின் தினசரி வாழ்கை முறை


பாபா சூரியன் உதிக்கும் முன் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். துனிக்கு முன்னால் உள்ள தூணின் மீது சாய்ந்து இருந்தபடி தியானத்தில் இருப்பார். அவர் என்ன செய்கின்றார் என்பது எவருக்கும் தெரியாது. தன அருகில் எவரையும் அப்போது அவர் வர விடமாட்டார். யார் வந்தாலும் பதினைந்து அடி தள்ளி நின்றபடிதான் இருக்க வேண்டும். தியானத்தில் உள்ளபோது அவர் 'யாதே ஹுக்', 'அல்லா வாலி ஹாய்', 'அல்லா மாலிக் ஹாய்' என்று முணுமுணுப்பது உண்டு. அதன் பின் சில யோகக் கலைகளை செய்வார்.
அந்த நேரத்தில் அப்துல் பாபா மற்றும் மாதவ் பாஸ்லே என்பவர்கள் மட்டும் மசூதிக்கு உள்ளே சென்று தரையை பெருக்கி சுத்தம் செய்து, விளக்குத் திரியை சரி செய்து, துனிக்கு அருகில் விறகுகளை வைத்து விட்டுச் செல்வார்கள்.
விடிந்த பின் பாகோஜி ஷிண்டே என்பவர் உள்ளே சென்று பாபாவின் கால்களையும், கைகளையும் மசாஜ் செய்து விடுவார். 1910 ஆம் ஆண்டு பாபா எரிகின்ற நெருப்பில் விழுந்த குழந்தையை காப்பாற்றியபோது அவர் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. பாகோஜி பாபாவின் பழைய கட்டை பிரித்து விட்டு, நெய்யை தடவி புதுக் கட்டு போடுவார். அவர் பாபா சமாதி அடைவதற்கு முன் எட்டு வருட காலம் அவருக்கு சேவை செய்து வந்தார் . பாபாவுக்கு தீப் புண் ஆறிய பின்னரும் அவர் பாபாவுக்கு தொடந்து சேவை செய்து வந்தார். அவர் புண்ணிய ஆத்மா .
பாபாவுக்கு ஊது குழாயில் புகையிலை அடைத்து வைத்து நெருப்பு பற்ற வைத்து பாபாவிடம் கொடுக்க பாபா அதில் இருந்து வரும் புகையை சிறிது இழுத்தப் பின் அதை அவரிடமே திருப்பித் தந்துவிடுவார். அப்போது காலை ஏழு அல்லது ஏழரை ஆகிவிட பாபாவின் தரிசனத்துக்கு பக்தர்கள் வரத் துவங்கி விடுவார்கள். வந்த சிலரிடம் பாபா எப்படியெல்லாம் மிக தூரத்தில் இருந்தவர்களையும் தான் காப்பாற்றினேன் என்பதையும், மரணம் அடைந்தவர்களை சொர்கத்துக்கு அனுப்பிய கதைகளையும் கூறுவது உண்டு. அவர் கூறியதையே பாபாவினால் குணம் அடைந்த மற்றும் காப்பாற்றப்பட்ட மக்கள் வந்து கூறும்போது பக்தர்கள் பாபா கூறியது உண்மையே எனத் தெரிந்து கொள்வார்கள்.



அவை எல்லாம் நடந்து கொண்டு இருக்கும் போதே மாதவ் பால்சேயும் துகாராமும் வந்து பாக்கெட்டுகளில் நீர் நிறப்புவார்கள் . பாபா பல் துலக்கியதே இல்லை. அவர் வாயை கொப்பளித்து விட்டு முகத்தையும் கை கால்களையும் அலம்பிக் கொள்வார். அவர் முகத்தை அலம்பிக் கொள்வதே பார்க்க தனி அழகாக இருக்கும். அவர் வாயை கொப்பளித்து துப்பும் நீரை அங்குள்ள தொழு நோயாளிகள் தம் உடம்பில் பூசிக் கொள்வார்கள். அது அவர்களுடைய நோயை தீர்க்கும் என்ற நம்பிக்கை உண்டு. பாபா முகத்தை கழுவிக் கொள்ளும் போதே பக்தர்கள் காகட ஆரத்திக்கு தேவையான பொருட்களை எடுத்து வருவார்கள். சாவடியில் ஒரு நாள் விட்டு ஒருநாள் காகட ஆரத்தி நடைபெறும்.


பாபா தினமும் குளித்தது இல்லை. பரதேசிகளுக்கு தினமும் குளிக்க வேண்டும் என்பது இல்லை. குளித்தாலும் அவர் கிராமத்தை விட்டு சற்று தள்ளிப் போய் புதர் மறைவில் இருந்தவாறு குளிப்பாராம் . வெகு காலத்துக்குப் பின்னரே அவர் மசூதியில் குளிக்கத் துவங்கினார். இரண்டு தாமிரக் குடத்தில் வெந்நீரும், குளிர்ந்த நீரும் சேவகர்கள் கொண்டு வர மசூதியின் வாசல் திரை சீலை போடப்பட்டு மறைக்கப்படும். பாபா தனக்கு தேவையான அளவு வெந்நீர் கலந்து கொண்டு குளிப்பார். சாதாரணமாக அவர் குளிக்க ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகும்.
குளித்துடன் அவர் துனிக்கு முன் சென்று நிற்க அவருடைய நெருங்கிய பக்தர்கள் அவருடைய உடலைத் துடைத்து விடுவார்கள். அவர் உபயோகித்த நீரை பலரும் தமது நோய்களைத் தீர்க்கும் புனித நீராகக் கருதி உபயோகிப்பார்கள். நாசிக்கை சேர்ந்த ராம்ஜி நாயக் என்ற புத்தி பேதலித்தவர் அந்த நீரை குடித்து குணம் அடைந்தார். அவர் அதற்கு நன்றிக் கடனாக பாபா உட்கார்ந்தபடி குளிப்பதற்காக பெரிய கல்லை பரிசாகத் தந்தார். அது இன்னமும் துவாரகாமாயியில் உள்ளது.

குளிக்கும் கல்

பாபா தினமும் குளிக்க மாட்டார். ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு ஒரு முறைதான் குளிப்பார். சில நேரங்களில் ஏழு அல்லது எட்டு வாரங்கள் கூட குளித்தது இல்லை. அது குறித்து அவருடைய பக்தர்கள் அவரிடம் கேட்டால் அவர் கூறுவாராம் ' நான் தினமும் கங்கை நதியில் குளித்து விட்டு வருகின்றேன். அதற்குப் பிறகு எதற்காக மீண்டும் குளிக்க வேண்டும்?'

குளிக்காமல் இருந்தாலும் கூட பாபா மிகவும் சுத்தமாகவே காட்சி அளிப்பார். குளிக்கும் முன் அவர் ஒரு பச்சை கலர் துணியை உடுத்திக் கொண்டு தன்னுடைய காப்பினியை துவைத்து துனியின் மீது காயப் போடுவார். அவர் காப்பினியைதான் எப்போதும் அவர் போட்டுக் கொண்டு இருப்பார். அவை மிகவும் முரட்டுத் துணி போல இருக்கும் . அவை கிழிந்து விட்டாலும் அதை அவர் உடுத்திக் கொள்வார். தாத்யா பாபாவிடம் மிகவும் வற்புறுத்திக் கூறியே பாபாவை வேறு புதுத் துணி உடுத்த வைப்பார். சில சமயங்களில் தாத்யா பாபாவின் காப்பினியில் உள்ள கிழிசல்களை தானே பெரியதாக கிழித்துவிட்டு பாபாவிடம் அதைக் காட்டி ' பாபா இந்த காப்னி கிழிந்து உள்ளதே, வேறு மாற்றலாம்' என ஒன்றும் தெரியாதது போலக் கூறுவார். உடனே பாபா காசிநாத் ஷிண்டே என்ற தன்னுடைய துணி தைப்பவரை அழைத்து புதிய துணியை தைக்கச் சொல்வார். அதற்கான கூலியை விட அதிகக் கூலியை அவருக்குத் தருவார். அதன் பின் பழைய காப்னியை துனியில் போட்டு விட்டு புதியதை உடுத்திக் கொள்வார்.



சாதாரணமாக தான் புதிய காப்னியை உபயோகித்தால் தன்னுடைய பழைய காப்னிகளை அங்குள்ள சாதுக்களுக்கும் ஏழைகளுக்கும் தந்து விடுவார். அதனால் பாபா எப்போது புதுத் துணி தைத்தாலும் அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். 1914 ஆம் ஆண்டு ஒருமுறை பாபா தனது காப்னியை மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த நார்கே என்பவர் தனது மனதில் நினைத்தார் ' எனக்கும் ஒரு காப்னியை பாபா தந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ' . அந்த பக்கம் வந்த பாபா அவர் பக்கம் திரும்பினார் ' இந்த பரதேசிக்கு உனக்கு காப்னியை தர இஷ்டமில்லை. நான் என்ன செய்வது?' பாபா சில நேரத்தில் முடி வெட்டுபவரை அழைத்து தன்னுடைய தலையை மொட்டை அடித்து விடுமாறு கூறுவது உண்டு. அது போலவே தன்னுடைய மீசையையும் சரி வர வெட்டி விடச் சொல்லி அழகு செய்து கொள்வார். அவனுக்கு நிறைய பணமும் தந்துஅனுப்புவார்.


காலை சுமார் எட்டு மணிக்கு பாபா பிட்சை எடுக்கச் செல்லுவார். அவர் கணபதி தத்ய படேல், அப்பாஜி படேல், ஷஹராம் ஷேல்ஹே ,வாமன் கோண்ட்கர் , மற்றும் நாதுராம் மார்வாடி போன்றவர்களுடைய வீடுகளுக்குச் சென்று பிட்சை எடுப்பார். அவர்கள் அனைவரும் அதை பெரும் பாக்கியமாகவே கருதினர். அவர்கள் வீட்டின் முன் சென்று ' ஆபாத் -ஹி -ஆபாத், அல்லா பலா கரேகா, பாசா மா, ஜீவன் தே ரொட்டி தே போன்ற ஏதாவது ஒரு கோஷத்தை எழுப்பிபிட்சை கேட்பார்.
அப்பாஜி படேல், மற்றும் ,வாமன் கோண்ட்கர் வீட்டில் சென்று ' பக்ரி தே ( ரொட்டி குடு ) என்று கூவுவார். ஷஹராம் ஷேல்ஹே வீட்டின் முன் சென்று ' இட்லாயி பாய் ரொட்டி தோ' என்பார்.


நந்துராம் மார்வாடி வீட்டிற்குச் சென்று 'நந்துராம் பாக்ரே தே என்பார்' அல்லது அவருடைய மனைவி ராதாபாயை அழைத்து 'போப்பிடி ( திக்குவாய்) பாக்ரி தே' என்பார். ராதாபாய் திக்குவாய் உடையவர். சில நேரத்தில் அவளுடைய பெயரை சொல்லியும் அவர் அழைப்பார். அவள் பிட்சையை கொண்டு வர தாமதித்தால் அவள் மீது கோபம் கொண்டு கத்துவார். சில நேரத்தில் அவர் அவளுடைய வீட்டிற்குச் சென்று 'போப்பிடி பாய் மீத்தா (இனிப்பு) தே' என்பார். அவளும் பாபா கேட்டு விட்டதினால் பூரண் போளியை செய்து தருவாள்.
அதில் அவர் தான் சிறிது எடுத்துக் கொண்டு மீதியை மற்றவர்களுக்குத் தந்து விடுவார். அவர் பிட்சை எடுக்க எப்போது போவர் என்பது தெரியாது, ஆனால் அவர் தினமும் ஒருவர் வீட்டிற்குப் பின் மற்றவர் என ஒரு குறிப்பிட்ட முறைப்படித்தான் வீடுகளுக்கு செல்வார். மேலும் சில நாளில் சிலர் வீட்டிற்கு எட்டு முறைக் கூட பிட்சை எடுக்கச் செல்வார். முதல் மூன்று வருடங்கள் அவர் தினமும் எட்டு முறை பிட்சை எடுத்து வந்தார், அதன் பின் மூன்று வருடங்கள் நான்கு முறையும் அடுத்த பன்னிரண்டு வருடங்கள் தினமும் இரண்டு முறையும் கடைசி சில நாட்களில் ஒருமுறை மட்டுமே பிட்சை எடுத்து வந்தார்.


பாயாஜிபாயின் வீட்டிற்கு அவர் பிட்சை எடுக்கச் சென்றால் அவள் அவரை வீட்டிற்குள் வந்து உணவு அருந்தும்படிக் கூறுவது உண்டு. ஆனாலும் பாபா எவருடைய வீட்டிற்குள்ளும் நுழைந்து உணவு அருந்தியது இல்லை. வீட்டின் தாழ்வாரம் வரைதான் சென்று அமருவார்.
பாயாஜிபாயின் வீட்டிற்கு அவர் எத்தனை முறை பிட்சை எடுக்கச் சென்றாலும் அவள் அலுத்துக் கொள்ளாமல் ஏதாவது உணவை கொண்டு வந்து போடுவாள். ஒன்றுமே இல்லை என்றாலும் சிறிது ஊறுகாய் அல்லது அப்பளாமையாவது கொண்டு வந்து போடுவாள். அவளை பாபா தன்னுடைய சகோதரி என்பார் . அவளும் அவருடைய மகிமைகளை புரிந்து கொண்டு இருந்ததினாலோ என்னவோ அவருக்கு பிட்சை போடாமல் தான்சாப்பிட மாட்டாள். அவள் பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்தவளாக இருந்து இருக்க வேண்டும்.


1876 ஆம் ஆண்டில் அஹமத் நகர் பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டு இருந்தது. பாபா சீரடிக்கு வந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருக்கும். ஆகவே பாபா வசதி இருந்தவர்கள் வீடுகளில் மட்டுமே சென்று பிட்சை கேட்பார். அவர்களில் முக்கியமானவர்களான நந்து ராம் மற்றும் பாயாஜி பாய் வீடுகளில் அந்த நேரங்களில் பாதி ரொட்டி மட்டுமே கிடைக்கும்.


பாபாவின் மகிமைகளை பின்னர் புரிந்து கொண்ட மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு வரலாயினர். பல பணக்காரர்கள் பலவிதமான உணவுகளை அங்கு வந்து அவருக்குத் தந்தாலும் அவற்றை அவர் உபயோகித்தது இல்லை. அவருக்கு பிட்சை எடுத்து உண்பதே பிடித்து இருந்தது. அவருக்கு ஆடம்பரங்களும் அலங்காரங்களும் ஏற்புடையதாக இல்லை. ஒரு பரதேசி போலவே இந்த உலகில் வந்தவர் பரதேசி போலவே வாழ்ந்தார். மறு நாளைக்கு என அவர் எதையுமே வைத்துக் கொண்டது இல்லை. கடைசி நாட்களில் அவருக்கு உடல் நலமின்றே போனபோதும் கூட அவர் மற்றவர்களை பிட்சை எடுக்க அனுப்பி அவர்கள் கொண்டு வந்ததையே தான் உண்டார். சில சமயங்களில் அவருக்கு வயிற்று உபாதை ஏற்பட்டால் மூலிகைகளைக் கொண்டு தானே தயாரித்த நாட்டு மருந்தை அருந்துவார். அப்போது அதை அங்கு இருக்கும் பக்தர்களுக்கும் தருவார். கண்களில் நோய் ஏற்பட்டபோது கரும் மிளகை அரைத்து அதைத் தடவிக் கொள்வார் .
அவர் அடிக்கடி ஆஸ்துமா நோயினால் அவதிப் பட்டார். அவரை அந்த நிலையில் பார்க்கும் போது பக்தர்கள் அழுது விடுவார்கள். ஒருமுறை ரகுவீர் புரந்தாரே என்பவர் பாபா ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டதை பார்த்து விட்டு அழுது விட்டார். அதைக் கண்ட பாபா அவரிடம் கூறினார் ' சகோதரா எதற்காக நீ அழுகின்றாய்? இது விரைவில் குணமாகிவிடும்'


பாபா உடல் நலிவுற்று இருந்தாலும் தானே பிட்சை எடுபதையே விரும்பினார். முடியாமல் இருந்தால் சிலரது தோளில் கையை வைத்துக் கொண்டு அவர்களுடன் ஐந்து வீட்டிற்குச் சென்று பிட்சை பெற்று வருவார். பாபாவின் உடல் நிலையைக் கருதி அவருடைய பக்தர்கள் அவருக்கு சக்கர நாற்காலி வாங்கித் தந்தனர். ஆனால் அவர் அதை உபயோகிக்கவில்லை. அதை தனது கையினால் ஒரே முறை மட்டுமே தொட்டு விட்டு வைத்து விட்டார். அந்த நாற்காலி இன்றும் அங்குள்ள காட்சியகத்தில்வைக்கப் பட்டு உள்ளது. பாபாவுடன் பழகிய புண்ணியசாலிகள் மாதவராவ் தேஷ்பாண்டே, பாலக் ராம் வாமன் ராவ் படேல் போன்றவர்கள் சிலர் உண்டு.
தனது நினைவலையில் ஸ்ரீ சாயி சதானந்த எழுதினர் ' ஒருமுறை பாலக்ராம் சீரடியில் இல்லை. அப்போது அவருக்கு பதிலாக பிட்சை எடுக்க எனக்கு வாய்ப்பு வந்தது. நான் ஸ்ரீ ஜோகின் வீட்டில் இருந்து உணவும் வேறு சிலரிடம் சென்று பாலும் கொண்டு வருவது உண்டு' ஒருமுறை நார்கே அதைப் பார்த்தார். அவருக்கு தனக்கும் அந்த பாக்கியம் கிடைக்காதா என்ற ஆசை எழுந்தது. அவர் கூட்டும் பாண்டும் போட்டுக் கொண்டு மசூதிக்கு ஒருமுறை வந்த போது அவருடைய மனதை அறிந்து கொண்ட பாபா அவரை அந்த கோலத்திலேயே பிட்சை எடுக்க அனுப்பினார். அதற்குப் பின் நார்கே நான்கு மாதம் அந்த வேலையை செய்தார்.
பாபா தன்னுடைய தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு பிட்சைக்கு செல்வர். ரொட்டி மற்றும் மற்ற உணவை பையில் போட்டுக் கொண்டும் பால் மற்றும் பிற திரவ பண்டத்தை கிண்ணத்திலும் போட்டுக் கொள்வார். அவர் உணவு எப்படி உள்ளது என அதன் சுவையைப் பார்க்க மாட்டார். சுவையைத் தவிர்க்க வேண்டும் என அனைவருக்கும் கூறுவார். துவாரகாமாயியில் இருந்து கிளம்பி சாவடிக்குச் சென்று முதலில் ஷகாராம் ஷேல்கே , அடுத்து வாமனராவ் கோன்த்கர், அடுத்து பாயாகி படேல், தத்யகோடி படேல் மற்றும் கடைசியாக நந்துராம் மார்வாடி என வரிசையாகச் ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்வார். பாயாகி படேல் வீட்டு அருகில் கற்களால் ஆனா சாலையே இருந்ததினால் பாபா காலணி அணிந்து கொண்டே செல்வார். வழியில் உள்ள நாய் மற்றும் காக்கைகளுக்கு உணவு போடுவார். அவருடைய காலணிகள் இன்றும் அவர் நினைவாக வைக்கப்பட்டு உள்ளன. பிட்சை கொண்டு வந்ததும் அதில் சிறிது துனியில் போட்டு விட்டு மீதத்தை அங்கிருந்த 'கொலும்பா' என மராட்டிய மொழியில் அழைக்கப்பட்ட மண் பானையில் போட்டு வைப்பார். அதை நாய்களும், பூனைகளும், எறும்புகளும் வந்து சாப்பிட்டு விட்டுப் போகும். அதில் இருந்து பிராணிகள் மட்டும் அல்ல எவர் வேண்டுமானாலும் உணவை எடுத்துச் செல்லலாம். மசூதியை சுத்தம் செய்ய வருபவளுக்கு குறைந்தது ஆறு ரொட்டியாவது தினமும் அதில் இருந்து கிடைக்கும்.


பாபா தினமும் லேன்டி என்ற இடத்திற்கு காலையில் 8.30 முதல் 9.00 மணிக்குள் நடந்து போவது உண்டு . அப்போது சில நாட்கள் அவர் காலணிகள் அணிவார், சில நாட்கள் அணிய மாட்டார் . வெளியில் சென்று சிறிது நேரம் அங்குள்ள சுவற்றில் கையை வைத்துக் கொண்டு நிற்பார். அதன் பின்னர் மாருதி ஆலயத்தின் எதிரில் சென்று நிற்பார். அங்கு சென்று தன் கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டிக் கொண்டு எதோ செய்வதைப் பார்க்கலாம். அதன் பின் குருஸ்தானில் சென்று நின்றபடி எவருடனோ பேசிக்கொண்டு இருப்பதைப் போன்ற தோற்றம் தருவார்.


வாடாவில் வசிக்கும் பக்தர்கள் அவர் வருகையை எதிர்பார்த்து தெருவின் இரு புறமும் வரிசையாக நிற்பார்கள். மசூதியில் இருந்து கிளம்பி வரும் பாபா அனைவரையும் பார்த்து சிரித்தபடிச் செல்வார். சிலரை பெயரைக் கூறி அழைத்து விசாரிப்பார். அங்கிருந்து கிளம்பி 'பிலாஜி குருவே' என்பவர் வீட்டிற்கு போகும் வழியில் இடப்புறம் திரும்பி 'விட்டலா' ஆலயத்தின் எதிரில் சாலையைக் கடப்பார். அங்கிருந்து வலப்புறம் திரும்பிச் சென்று 'கனிபிநாத் ' என்ற ஆலயத்தைத் தாண்டி மீண்டும் வலப்புறம் திரும்பி லேண்டிக்கு செல்வார். அங்கு சென்று காலை கடனைக் கழிப்பார்.

அங்குள்ள வேப்ப மற்றும் அத்தி மரத்தின் இடையே உள்ள இடத்தில் அணையாத விளக்கு எரிந்து கொண்டு இருக்கும். பாபா அங்கு சென்று சற்று நேரம் அமர்ந்தபடி இருப்பார். அந்த விளக்கை சுற்றி சணல் கோணியினால் ஆனா தடுப்புகள் போடப்பட்டு இருக்கும் . அந்த இடத்தை அப்துல் பாபா என்பவர் சுத்தப்படுத்தி வைப்பார். பாபாவுக்காக இரு குடம் நீரையும் வைப்பார். விளக்குக்கு எண்ணை ஊற்றி அணையாமல் பார்த்துக்கொள்வார்.

அந்த குடத்தில் உள்ள தண்ணீரை எடுத்து அனைத்து திசைகளிலும் பாபா தெளிப்பார். அப்போது எவரையுமே -அப்துல்லா பாபாவையும் சேர்த்தே- தன்னுடைய பக்கத்தில் இருக்க அனுமதிக்க மாட்டார். அனைவரும் வெகு தூரம் தள்ளி நிற்க வேண்டும். அந்த இரண்டு மரங்களுக்கான செடிகளை பாபாவே நட்டு இருந்தார் . சற்று தொய்ந்து இருந்த செடியை இப்படியும் அப்படியும் பாபா ஆட்டுவார் . அதனால்தானோ என்னவோ அது மிகவும் பருமனாக நிமிர்ந்து வளர்ந்தது.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தினமும் பாபா லேன்டிக்கு செல்வது அவரை ஊர்வலத்தில் அழைத்துச் செல்வது போல இருந்தது.


பாபா மசூதியை விட்டு வெளியில் வந்ததும் பாகோஜி ஷிண்டே என்பவர் அவர் தலைக்கு மேல் ஒரு நிழல் குடையை பிடித்துக் கொண்டு நடக்க நானா சாஹேப் நிம்மோங்கர் என்பவரும் பூட்டி என்பவரும் அவருடைய இரண்டு பக்கத்திலும் நடந்து செல்வார்கள். அந்த ஊர்வலத்தின் நடை அழகே தனியானது.


சாதாரணமாக பாபா காலை பத்து மணிக்கெல்லாம் லேன்டிபாகில் இருந்து திரும்பி விடுவார். அதன்பின் காலை பதினோரு அல்லது பதினொன்று முப்பது வரை வரும் பக்தர்கள் கூறும் குறைகளைக் கேட்டும், அவர்களுடைய வேண்டுகோட்களை ஏற்றும் தரிசனம் நடைபெறும் . அதைத் தவிர அங்கு வந்து இசை இசைக்கும் கலைஞ்சர்களுக்கு நிறைய சன்மானமும் தந்து அனுப்புவார்.

சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் இரண்டு ரூபாயை பாபா வழங்குவார். பக்தர்கள் கொண்டு வருவதை பாபா தொட்டு ஆசிர்வதித்துவிட்டு அவர்களுக்கே அதை பிரசாதமாகத் தந்து அனுப்பி விடுவார். மிக அபூர்வமாகவே அவர் பிரசாதத்தை சிறிது உண்பார். அவர் தரும் பிரசாதத்தை பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். மாங்காய் விளைச்சல் பருவத்தில் மாம்பழங்கள் வந்தால் ஒன்றை தான் எடுத்துக் கொண்டு மற்றதை அங்குள்ளவர்களுக்கு விநியோகித்து விடுவார். யாரும் மாம்பழம் கொண்டு வரவில்லை எனில் தானே அதை வாங்கி மற்றவர்களுக்கு கொடுப்பது உண்டு.


தனக்கு வரும் இனிய தின்பண்டங்களை குழந்தைகளுக்குத் தருவது பாபாவின் பழக்கம். ஆகவே பல குழந்தைகள் தினமும் பாபாவைப் பார்க்க வருவது உண்டு. ஒரு வேளை அவர்கள் வரவில்லை எனில் அந்த தின்பண்டங்களை தனியாக எடுத்து வைத்து அவற்றை மறுநாள் குழந்தைகளுக்குத் தருவார். குழந்தைகளிடம் மிகவும் பிரியமாக இருப்பார். ஆகவே எவராவது குழந்தைகளை அனாவசியமாக கடிந்து கொண்டால் அவர்கள் மீது பாபா கோபப்படுவார். குழந்தைகளிடம் அத்தனை ஜாலியாகப் பழகும் பாபா பெரியவர்களிடம் சற்று ஒதுங்கியே இருப்பார். ஒரு புன்முறுவலுடன் அவர்களை அனுப்பி விடுவார். நல்ல மன நிலையில் உள்ள போது நீதிக் கதைகளைக் கூறுவார். அவற்றில் சில கதைகள் தவறுகளை கண்டிக்கும் விதமாக இருக்கும்.


அந்த கதைகளைக் கேட்கும் தவறு செய்தவர்களுக்கு அது தம்மைத்தான் குறிக்கின்றது என்பது புரியும் . சிலருக்கு ஒன்றுமே புரியாது. வேறு சிலர் கதைகளை மறந்து விடுவார்கள். அது என்ன கதை என மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தாலும் அவர்களுக்கு அது நினைவுக்கே வராது. அந்த அதிசயத்தை பலரும் அனுபவித்து உள்ளனர். சரியாக 11 .30 மணிக்கு மணி அடிக்கும். அது மதிய நேர ஆரத்திகான மணி. எவர் எங்கு இருந்தாலும் உடனே அவர்கள் அனைவரும் மசூதியில் வந்து கூடி விடுவார்கள். பாபாவுக்கு சந்தனத்தை அரைத்து இட்டும் மாலைகள் போட்டும் ஆரத்தி எடுக்கப்படும். பெண்கள் பாபாவுக்கு எதிரில் நிற்க ஆண்கள் பின் புறத்திலும் தாழ்வாரத்திலும் நிற்பார்கள். அந்த நேரத்தில் பாபாவின் முகத்தைப் பார்பதற்கே கோடி கண்கள் வேண்டுமாம். அத்தனை ஜொலிக்கும் முகமாக அவர் முகம் மாறி விடுமாம். அதை பலரும் தமது நாட்குறிப்பில் எழுதி வைத்து உள்ளனராம். கர்பாடேயின் தினக் குறிப்பை படித்தால் அந்த ஆனந்தம் என்பது என்ன எனப் புரியும். ஆரத்தி முடிந்ததும் பாபா அனைவருக்கும் உதி பிரசாதம் தந்து ஆசிர்வாதமும் தந்து அனுப்புவார்.

அனைவரும் சென்றபின் தன்னிடம் வந்துள்ள உணவை பத்து அல்லது பதினைந்து பக்தர்களுடன் பகிர்ந்து கொண்டு அருந்துவார். தாத்யா படேல், ராமச்சந்திர படேல், பய்யாஜி படேல் போன்றோர் பாபாவின் இடதுபுறம் அமர்ந்து கொள்ள , படே பாபா என்ற மாலேகான் பரதேசி, சாமா, பூட்டி, காகா சாஹேப் திக்ஷித், போன்றோர் அவருடைய வலது பக்கத்தில் அமர்ந்து கொள்வார்கள். தாத்யா படேல், ராமச்சந்திர படேல், பய்யாஜி படேல் போன்றோர் ஒரு தட்டிலும், பாபா மற்றும் படே பாபா இருவரும் இன்னொரு தட்டில் இருந்தும் உணவை எடுத்து சாப்பிடுவார்கள். பாபா என்றுமே தனியாக உணவு அருந்தியது இல்லை. அது போல படே பாபா வரும் வரையில் சாப்பிட மாட்டார்.
பக்தர்கள் கைகளையும் கால்களையும் அலம்பிக்கொண்டு வந்து பாபாவின் பக்கத்தில் அமர்ந்து கொள்வார்கள். எல்லா உணவையும் கலந்து பாபாவின் முன்னால் வைப்பார்கள். வாயிலில் தடுப்புச் சீலைகள் போடப்படும். அப்போது வெளியில் இருந்து எவரும் உள்ளே வரக் கூடாது. பாபா முதலில் உணவை கடவுளுக்கு பிரசாதமாக அளித்த பின் தனக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு மற்றதை வெளியில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தந்து விடுவார். உணவில் ஒரு பாகத்தை பாலுடன் கலந்தும் மற்ற பாகத்தை சக்கரையுடன் கலந்து பிரசாதமாகத் தருவார்.
அதன் பின் நிமோல்கரும் சாமாவும் உணவை மற்றவர்களுக்கு பரிமாறுவார்கள். எவருக்காவது எந்த உணவாவது தேவை எனில் பாபா அவர்களுக்கு அதைத் தருவார்.
எம். டபில்யு. பிரதான் அது குறித்து இப்படி எழுதி உள்ளார். பாபாவுடன் நானும் அங்கு சாப்பிட்டு உள்ளேன். பாபா அனைவரது தட்டுகளையும் உணவினால் நிரப்புவார். அதில் ஒரு பகுதியை நான் வீட்டிற்கு அனுப்பி விடுவேன். அது மொத்த குடும்பத்திற்கே போதுமானதாக இருக்கும். சாப்பிட்டு முடிந்ததும் பாபா அனைவருக்கும் பழம் தருவார். என்னுடைய மகன் பாபுவிற்கு சமைத்த உணவு பிடிக்காது என்பதினால் பாபா அவனுக்கு பழங்களைத் தருவார்.

( Tamil Translation : Santhipriya ) .......தொடரும்


for all details::::: http://shirdisaibabatamilstories.blogspot.com/2010/01/daily-routine-of-shirdi-sai-baba.html

குழந்தையை பாபா காப்பாற்றிய மகிமை

அன்பானவர்களே
2-3 நாட்களுக்கு முன் தான் கள்ளம் கபடமற்ற சிறு குழந்தைகளை பாபா எப்படி பாதுகாக்கிறார் என்பதை விளக்க ஒரு கதையை ‘என் சகோதரன் என்னை காப்பாற்றினர் ’ என வெளியிட்டு இருந்தேன் . இப்போது அன்ஷு எனபவரின் குழந்தையை பாபா காப்பாற்றிய மகிமையை அவரே கூறுகின்றார் கேளுங்கள் .
2009 ஆம் ஆண்டு , மே மாதம் ஏழாம் தேதி . முன்றரை வயதான என் பையனுக்கு நான் உணவு அளித்துக்கொண்டு இருந்தேன் . நாங்கள் இருந்தது மூன்றாம் மாடியில் . ஜன்னலில் உட்கார்ந்து கொண்டு உணவு அருந்திக்கொண்டு இருந்தவன் தவறி கீழே விழுந்தான் . கீழேயோ டிஷ் ஆண்டென்னா , பல செடி கொடிகள் இருந்தன. அவன் புல்லில் விழுந்து விட்டான் ,அழுது புலம்பினான் . சாயீ , சாயீ எனக்க கதறியவண்ணம் ஓடிசென்ற நான் பாபாவை வேண்டிக் கொண்டே அவன் நெற்றியில் பாபாவின் வீபுதியான உடியை தடவி அதை நீருடன் கலந்து அவனுக்குத் தந்தேன் . உடனேயே எமேர்ஜன்சி அம்புலன்சிற்கு போன் செய்து வண்டியை வரவழைத்து ஆஸ்பத்தரிக்கு அழைத்து சென்றேன் . என் மனதில் இருந்த வேதனையை மறக்க மனதி சாயி ஜபம் செய்துகொண்டே இருந்தேன் .

பிள்ளையோ அழுதுகொண்டே இருந்ததினால் மூன்றாம் மடியில் இருந்து விழுந்துவிட்ட அவனை உடனேயே எக்ஸ்ரே எடுக்க அனுப்பினார்கள் . நானோ சாயீ, சாயீ என கதறிக்கொண்டு இருந்தேன் . டாக்டர்கள் CT ஸ்கேன் முதல் எக்ஸ்ரே வரை அனைத்தையும் எடுத்துவிட்டு எதிலும் எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறினர். அனால் குழந்தையோ விடாது அழுதுகொண்டு வயிற்றில் வலி , வலி என்று அழுதான் . அகவே அவனுக்கு MRI ஸ்கேன் எடுக்க ஏற்பாடு ஆயிற்று . டாக்டர்கள் மாலையில்தான் வந்தார்கள் . அதிலும் எல்லாம் சரியாகவே இருக்கிறது என்றனர் . ஆனால் குழந்தை வயிற்று வலி என்பதினால் சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை . என்ன அதிசயம் ! மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தாலும் வயிற்றின் உள்ளையோ, வெளியிலோ எந்த காயமும் எல்லை , பயத்தில் அழுது இருந்தான் . டாக்டர்களே அதிசயித்தனர் . மூன்றாம் மடியில் இருந்து விழுந்தாலும் அடிபடாமல் காப்பற்றி இருந்தது சாயீநாதர் என்பதே எங்கள் நம்பிக்கை . அவர் இல்லாவிடில் வேறு யார் அவனை காப்பற்றி இருக்க முடியும் ? சத்குரு சாயீ எங்கள் குடும்பத்தை என்றும் ரட்சித்து காப்பாற்றியே வருகின்றார். சாயிக்கு நிகரானவர் யார் ? உரக்க கூறுங்கள், ஜெயகுரு, உரக்க கூறுங்கள், சாயிபாபாவுக்கு ஜெய் ,அனந்தகோடி பிரம்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ் பரபிரம்ம சச்சிதானந்தா சமரத் சத்குரு சாய்நாத் மகாராஜ் ஜெய் ஹோ ...

ஓம் சாயிராம்
அன்ஷு

சாயி சத் சரித்திரம் (சுருக்கப்பட்டது)

அன்பானவர்களே
கிரிஜா சகோதரி சாயி பாபாவின் சுருக்கமான சத் சரித்திரத்தை அளித்துள்ளார். அலுவலகம் செல்பவர்களுக்கு அதிக நேரம் இல்லை என்பதினால் இதை படித்து, ஆனந்தம் அடைந்து, பாபாவின் அருளையும் பெற்றுக் கொள்ளாலாம். அது PDF பார்மட்டில் தரப்பட்டு உள்ளது.

http://www.4shared.com/document/bm_RyHEs/concise_sai_sat_charithra_tami.html

குரு பாதுகா ஸ்தோத்ரம்


அன்பானவர்களே இன்று நான் உங்களுக்காக சாந்திப்ரியா என்கின்ற ஜெயராமன்ஜி அவர்கள் தமிழாக்கியுள்ள பாபாவின் குரு பாதுகா ஸ்லோகத்தை வெளியிட்டு உள்ளேன் . இதை படித்து பாபாவின் அருளைப் பெறுங்கள் .

Anantha samsara samudhra thara naukayithabhyam guru bhakthithabhyam,
Vairagya samrajyadha poojanabhyam, namo nama sri guru padukhabyam,

Salutations and Salutations to the sandals of my Guru,
Which is a boat, which helps me, cross the endless ocean of life,
Which endows me, with the sense of devotion to my Guru,
And by worship of which, I attain the dominion of renunciation.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
முடிவில்லா மறு பிறப்பில் இருந்து விடுதலை தரும் தோணி இது
குருநாதருக்கு தூய பக்தியை செலுத்தும் மனநிலையை தரவல்லது
இதை வணங்குவதின் மூலம் பட்டற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்

Kavithva varasini sagarabhyam, dourbhagya davambudha malikabhyam, Dhoorikrutha namra vipathithabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru, Which is the ocean of knowledge, resembling the full moon, Which is the water, which puts out the fire of misfortunes, And which removes distresses of those who prostrate before it.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
முழு பௌர்ணமி நிலா போன்றதும் அறிவுக் கடலுமாகும் இந்த பாதுகை
நெருப்பு போன்ற துயரங்களையும் அழிக்கும் கருணை நீர் இது
சரணாகதி அடைந்தவர்களின் துன்பங்கள் அனைத்தையும் அழிக்க வல்லது.

Natha yayo sripatitam samiyu kadachidapyasu daridra varya, Mookascha vachaspathitham hi thabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru, Which make those who prostrate before it, Possessors of great wealth, even if they are very poor, And which makes even dumb people in to great orators.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
தன்னை வணங்கித் துதிபவர்கள் ஏழைகள் என்றாலும்
அவர்களையும் செல்வந்தர்களாக்கும் சக்தி கொண்டது
ஊமைகளைகூட சக்தி மிக்க பேச்சாளராக்கும் வல்லமை கொண்டது

Naleeka neekasa pada hrithabhyam, nana vimohadhi nivarikabyam, Nama janabheeshtathathi pradhabhyam namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru, Which attracts us, to lotus like feet of our Guru, Which cures us, of the unwanted desires, And which helps fulfill the desires of those who salute.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
தாமரை மலர் போன்ற குருவின் பாதங்களை அலங்கரிக்கும் இது
வீண் ஆசைகளை அழித்து மனதை தூய்மை படுத்தும்
தூய்மையாகத் துதிபவர்கள் எண்ணங்களை நிறைவேற்றும்

Nrupali mouleebraja rathna kanthi sariddha raja jjashakanyakabhyam, Nrupadvadhabhyam nathaloka pankhthe, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru, Which shine like gems on the crown of a king, Which shine like a maid in the crocodile infested stream, And which make the devotees attain the status of a king.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் மன்னனின் கிரீடத்தில் ஜொலிக்கும் மாணிக்கக் கல் இது முதலைகள் சூழ்ந்த நதியில் ஜொலிக்கும் இளம் பெண் போன்றது தன் பக்தனை மன்னனாகவே மாற்றும் சக்தி கொண்டது

Papandhakara arka paramparabhyam, thapathryaheendra khageswarabhyam, Jadyadhi samsoshana vadaveebhyam namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru, Which is like a series of Suns, driving away the dark sins, Which is like the king of eagles, driving away the cobra of miseries, And which is like a terrific fire drying away the ocean of ignorance.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் கொடிய பாபங்களை ஒழிக்க வந்த ஆயிரம் சூரியன் போன்ற சக்தி கொண்டது நச்சுப் பாம்புகளைப் போன்ற துயரங்களை அழிக்க வந்த ராஜா கருடனைப் போன்றது கடல் போன்ற அறியாமையை பொசுக்க வந்த தீயைப் போன்றது

Shamadhi shatka pradha vaibhavabhyam, Samadhi dhana vratha deeksithabhyam, Ramadhavadeegra sthirha bhakthidabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru, Which endows us, with the glorious six qualities like sham, Which gives the students, the ability to go in to eternal trance, And which helps to get perennial devotion to the feet of Vishnu.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் அளவற்ற ஆரறிவை அனைவருக்கும் தரவல்லது மாணவனைப் போன்று வந்தவர்க்கும் பேரானந்த நிலையைத் தருவது விஷ்ணுவின் பாதத்தை நிலையாக வணங்கும் சக்தி தரவல்லது

Swarchaparana makhileshtathabhyam, swaha sahayaksha durndarabhyam, Swanthachad bhava pradha poojanabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru Which bestows all desires of the serving disciples, Who are ever involved in carrying the burden of service And which helps the aspirants to the state of realization.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
என்றென்றும் தம் பணியை செய்து கொண்டிருக்கும்
தம் சிஷ்யர்களின் தேவைகளை பூர்த்தி செய்து
ஆத்மா ஞானம் பெற்றிட வழி வகுக்கும் வல்லமை படைத்தது

Kaamadhi sarpa vraja garudabhyam, viveka vairagya nidhi pradhabhyam,
Bhodha pradhabhyam drutha mokshathabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru Which is the Garuda, which drives away the serpent of passion, Which provides one, with the treasure of wisdom and renunciation, Which blesses one, with enlightened knowledge, And blesses the aspirant with speedy salvation.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
மோகம் என்ற பாம்பினை அழிக்கவல்ல கருடனைப் போன்றது
பட்டற்ற மனநிலை, அளவற்ற அறிவு அனைத்தையும் தருவது
ஆத்மா ஞானத்தைப் பெற மனதார ஆசி தரும்
தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு விரைவாகவே முக்தி தரும்

Guru guide us all.
குரு நம்மை காக்கட்டும்
Dear Readers to view the video and download Guru Paduka Strotram Please click on the download button below.

http://www.saibababhajans.com/2009/11/sri-sai-paduka-darshan-shirdi-darshan.html

சாயி பிரேரணா

பாகம் - 1

· என் வழியில் நீ வந்தால் உனக்கு எல்லா வழியையும் திறந்து விடுவேன்
· எனக்காக நீ சிறிது நேரத்தை ஒதுக்கினால் , உனக்கு குபேரனுடைய போக்கிஷத்தை போன்றதை தருவேன் .
· என்னால் நீ பழிச்சொல்லை ஏற்றால் , உனக்கு பூரண அருள் கிடைக்கும்
· நீ என்னிடம் வந்தால் உன்னை நான் பாதுகாப்பேன்
· என்னைப் பற்றி நீ மற்றவர்களிடம் கூறிக்கொண்டே இருந்தால் , உன்னை விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்
· நீ என்னைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால் உன்னை ரத்னம் பொண்டு ஜொலிக்கும் ஆன்மீக ஞானம் உள்ளவனாக மாற்றுவேன்
· என் உதவியை நாடி வந்து என்னையே ஏற்றால் , உன்னை அடிமைத்தனத்தில் இருந்து மீட்பேன்
· எனக்காக உன்னை எந்த விதத்திலாவது நீ தந்துவிட்டால் , உன்னை விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்
· என் வழியில் நீ நடந்தால் , பெரும் புகழ் பெறுவாய் .
· என்னைப்பற்றி பாடிக்கொண்டே இருந்தால் , எந்த உலகையே நீ மறந்துவிடுவாய் .
· நீ என்னுடையவன் என ஆகிவிட்டால், அனைவரும் உன்னுடயவர்களாகி விடுவார்கள்

பாகம் - 2

· ஒரு கோவிலிலோ , குருத்வாராவிலோ அல்லது மசுதியிலோ செல்லும்போது அங்கெல்லாம் என்னையே நினைத்து கொண்டு இருந்தால் , உனக்கு அனைத்து இடத்திலும் தரிசனம் தருவேன்
· ஒவ்வொரு கணமும் நீ என்னையே நினைத்துக் கொண்டு இருந்தால் , அந்த ஒவ்வொரு கணமும் நான் உன்னை காப்பாற்றுவேன்
· எனக்காக சிறிது கஷ்டத்தை நீ ஏற்றுக் கொண்டால் , உனக்கு வாழ்கையில் ஏற்படும் அனைத்து கஷ்டத்தையும் விலக்குவேன் .
· என்னுடைய புனிதத்தலத்திற்கு (ஷீரடி ) வந்து நீ நடந்தால் நீ செய்த அனைத்து பாபங்களையும் ஒழிப்பேன்
· உன் கையால் நீ எனக்கு பிரசாதம் படைத்தால் , உன் வீட்டிலே உணவு பொருட்கள் நிறைந்தே இருக்கும்
· என்னுடைய புனிதப் புத்தகத்தை படித்தால் , நீ வாழ்வில் பெரும் வெற்றி அடைவாய்
· என்னுடைய பக்தர்களைக் காணும்பொழுது அவர்களில் நீ என்னையே பார்த்தால் , உன்னை ஜொலிக்க வைப்பேன்
· என் நாமத்தை ஒரு மணி மாலை அளவில் உருட்டி ஜபித்தால் , உன்னை சாதுக்களைப் போன்ற ஞானம் உள்ளவனாக்குவேன் .
· இதயப் பூர்வமாக ஓம் சாயிராம் என ஜபித்தால் , உன்னுடைய அனைத்து வேண்டுகோளையும் நான் கேட்பேன்
· என் மீதே தியானம் வைத்திருந்தால் , நீ கவர்ச்சி உள்ளவனாக மாறிவிடுவாய்
· எனக்காக நீ மௌனம் காத்தால் , உனக்கு அமைதி கிடைக்கும்
· நீ என் எதிரிலேயே அமர்ந்து இருந்தால் , நான் எப்போதும் உன்னுடனேயே இருப்பேன்
· சாந்திலால் , நீ என்னுடைய துதியை தூய மனதுடன் செய்ததினால் , உன்னுடைய வாழ்கையை அர்த்தம் உள்ளதாக மாற்றுவேன்


பாகம் - 3

· நீ என்னிடம் வந்தால் உன் துயர் நீக்குவேன் , துன்பத்தைக் களைவேன்
· நீ என்னுடைய புனித பூமியான ஷீரடியில் வாழ்ந்தால் , உன் வீட்டையும் புனித இடமாக்குவேன்
· என் பிரசாதங்களை நீ பக்தியுடன் ஏற்றால் , உன் நினைவுகளைத் தூய்மை ஆகுவேன்
· நீ என்னை பக்திபூர்வமாக வணங்கிவந்தால் , உன்னை கர்மயோகியாக மாற்றுவேன்
· எனக்கு நடக்கும் ஆரத்தியில் நீ சேர்ந்து பாடினால் , உன் நாவில் சரஸ்வதியை வாசம் செய்ய வைப்பேன் .
· என் வழியில் நீ நடந்தால் உனக்கு முன் நடந்து வழி காட்டுவேன்
· எனக்காக நீ துன்பமுற்றோர்க்கு உதவினால் , உன் இதயத்தில் ஆனந்தத்தையும் , அமைதியையும் தருவேன்
· என்னை உன் வீட்டில் நீ வைத்திருந்தால் , உன் வீடு சொர்க்கம் போல ஆகும்
· என்னுடைய உடி எனும் வீபுதியை நீ நெற்றியில் தடவிக்கொண்டால் , உன் முகமே தெய்வீக களை பெறும்
· என்மீது நீ பூக்கள் பொழிந்தால் , உன்னுள் நல்ல நினைவுகள் தோன்ற அருள் புரிவேன்
· என் பாதங்களைத் தொட்டு வணங்கினால் உன்னை அனைவரும் விரும்புவனாக ஆக்குவேன்
· என் பாதங்களைத் தொட்டு வணங்கினால் உன்னுள் முழுமையாக நான் வியாபித்து இருப்பேன்
· சந்தனத்தை என் நெற்றியில் பொட்டாக வைத்தால் உன்னை அதிஷ்டசாலியாக்குவேன்


பாகம் - 4

· நீ என்னுடைய கல்போன்ற கிரீடத்தின் முன் தலை குனிந்து நின்றால் உன்னுடைய பல்லாயிரக்கணக்கான பாபங்களை விலக்குவேன்
· நீ சாயி பக்தன் ஆனால் , பக்தி மார்கத்தின் பல வெள்ளங்களில் உன்னை மூழ்கடிப்பேன்
· நீ என்னுடைய படத்தை உன் உடலில் அணிந்து இருந்தால் உன் உடல் முழுவதும் நான் வியாபித்து இருப்பேன்
· நீ என்னைப்பற்றி புத்தகம் எழுதினால் அதை பிரபலமானதாக ஆக்குவேன்
· சீரடியில் வந்து நின்று என் புகழ் பாடினால் உனக்கு அனைத்து நற்குணங்களும் நிறையும்
· நீ பலமணி நேரம் நின்றுகொண்டு இருந்தபடி என்னை தரிசித்தால் , உன்னை அனைத்து புண்ணிய தீர்த்தங்களுக்கும் செல்ல வழி வகுப்பேன் அல்லது அனைத்து
புண்ணிய தீர்த்த மகிமைகளை உனக்கு நான் அளிப்பேன்
· நீ என் பாதுகைகளை வணங்கினால் உன்னை என்னுடைய முழு பக்தனாக ஏற்றுக்கொள்வேன்
· நீ எனக்கு முன்னால் விளக்கு ஏற்றினால் , உன் வாழ்வும் ஓளி மிக்கதாக ஆகும்
· நீ என்னுடைய வழிபாட்டு தலத்திற்கு வந்து என்னை வணங்கினால் பல பக்தர்கள் அங்கு வந்து வணங்கியதற்கு சமம் ஆக்குவேன்
· என்னை உன் வீட்டில் வைத்து வழிபட்டால் , உன்னுடைய அனைத்து வழிபாட்டிலும் என்னை நீ காணலாம் .
· உனக்கு சீரடிக்கு வர மனது இருந்தால் , மீண்டும் மீண்டும் ஷீரடிக்கு வர வழிப்பேன்
· நீ என்மீது தூய பக்தி கொண்டு அன்பு செலுத்தினால் , என்னுடைய முழு அன்பும் உனக்கு கிடைக்கும்
· நீ என்னை உன்னுடையவனாக நினைத்தால் , என்னை உன்னுள் நீயே காண முடியும்


பாகம் - 5

· உன்னுடைய வாழ்கை எனும் ஓடத்தை என்னிடம் தந்துவிட்டால் , இந்த வாழ்வெனும் கடலை கடக்க நான் உதவி செய்வேன்
· நீ துனியில் இருந்து வரும் புகையை சுவாசித்தால் உன் உடலில் உள்ள அனைத்து நோயும் நீங்கிவிடும்
· துவாறகாமாயி மற்றும் என் சமாதியின் பெருமையும் நீ உணர்ந்து கொண்டால் என்னை நீ பார்க்க முடியும்
· உன்னுடைய வாழ்கையையே என்னிடம் தந்து விட்டால் , உன்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக நான் இருப்பேன்
· என் மீது நம்பிக்கை வைத்து என்மீது உன் மனதை செலுத்தி வந்தால் அனைவரும் உன் மீது நம்பிக்கை வைப்பார்கள்
· வியாழன் அன்று தரப்படும் என்னுடைய பிரசாதத்தை நீ பணிவுடன் ஏற்றுக்கொண்டால் அன்றைய தினத்தின் அனைத்து நன்மைகளும் உனக்கு கிடைக்கும்
· என்னையே நீ நினைத்துக் கொண்டு இருந்தால் அனைவரும் உன்னையே நினைத்துக் கொள்வார்கள்
· என்னையே நீ வேண்டிக்கொண்டால் உன்னுடைய அனைத்து வேண்டுகோளின் போதும் நான் வந்து உனக்கு வழி காட்டுவேன்
· என்னை தூய கண்களுடன் நீ தரிசித்தால் அனைத்து மதத்தினரையும் அன்புடன் பார்க்க வைப்பேன்
· என்னை ஊதுபத்தி புகையில் இருந்து வெளிவருவதாக கருதிப் பார்த்தாயானால் , எந்த இடத்தில் வரும் புகையிலும் என்னை நினைக்க வைப்பேன்
· சாயி ஆலயத்தில் ஏதாவது வேலையில் நான் உதவிக்கொண்டு இருப்பவனைப் போல இருப்பதாக உணர்ந்தால் , உன்னுடைய அனைத்து காரியத்திலும் நான் உதவுவேன்
· என்முன் நீ கைகூப்பி நின்றால் உன் வாழ்கையில் ஏற்படும் அனைத்து தடங்கல்களையும் தடுத்து நிறுத்துவேன்


பாகம் - 6

· என்னுடைய பாதயாத்திரையின்போது என் பக்கத்திலேயே நீ நடந்து வந்தால் அனைத்து பாதயாத்திரையிலும் உன்னை நான் அழைத்துக் கொள்வேன்
· என் பாதயாத்திரையில் கலந்து கொள்பவர்களுக்கு நீ சேவை செய்தால் உன்னுடைய அனைத்து சேவையிலும் நானும் பங்கேற்பேன்
· சீரடிக்கு நடைப் பயணமாக நீ வந்தால் , அனைத்து புண்ணிய இடங்களுக்கும் செல்ல உதவுவேன்
· ஒருமுறை என் பாதயாத்திரையில் நீ கலந்து கொண்டால் உன்னுடன் எழுபத்தி ஒரு ஜென்மம் நான் பயணிப்பேன்
· என் பாதயாத்திரையில் ஒன்பது நாள் பயணத்தில் நீ பங்கேற்றால் , உன் உயிர் மூச்சாக நான் இருப்பேன்
· என் சமாதியில் நீ துணியை போட்டு வணங்கினால் ஒவொரு இழையின் அளவுக்கு நான் உனக்கு நன்மையை திருப்பித் தருவேன்
· பாதயாத்திரையில் என் பல்லக்கை நீ சுமந்து கொண்டு சென்றால் அதன் சுமையை பூப்போல மாற்றுவேன் .
· பாதயாத்திரையில் என் பாடத்தை மனதில் நினைத்திருந்தபடி ஸ்ரீ சாயி ஸ்ரீ சாயி என கூவிக்கொண்டே சென்றால் நடக்கும் வலியை உன் கால்கள் உணரவே உணராதது
· எனக்காக நீ சுயநலம் இன்றி வேலை செய்தால் உன் கைகள் நல்லவற்றையே செய்யும்
· என்னுடைய சமாதியில் மிகுந்த பணிவோடு முன் தலையால் தொட்டு வணங்கினால் , அங்கு என்னையே நீ காணலாம்
· என் சமாதிக்கு முன் வேண்டுவது கிடைக்கும்
· என் சமாதி முன் உன் இரு கைகளையும் நீட்டியபடி வேண்டும் பொழுது அந்த கைககள் நிறையும் அளவு அனைத்தும் நான் தருவேன்
· என்னை உன்னால் பார்க்க முடியாத பொழுது அழுதால் அந்த கண்ணீரிலேயே இறைவனின் ஓளி கிடைக்கும்


பாகம் - 7

· ஷீரடிக்கு வந்து என்னுடைய ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நீ என்னுடைய பிரசாதத்தை உண்டால் உனக்கு வரும் அனைத்து தொல்லைகளும் விலகி தீமை ஒழியும்
· காகாட் ஆரத்தியில் நீ கலந்து கொண்டால் அங்கு உனக்கு என் தரிசனத்தைத் தருவேன்
· நீ அங்கு வந்து எனக்கு தேங்காயைத் தந்தால் உன்னை ஒரு யோகி போல மாற்றுவேன்
· என்னுடைய ஆரத்தியில் கலந்துகொள்ள உன் நேரத்தை ஒதுக்கினால் உனக்கு வரும் அனைத்து தடைகளையும் விலக்குவேன்
· என் ஆலயத்தில் உள்ள கொடியை நீ பக்திபூர்வமாகப் பார்த்தால் என்னுடைய சச்சிதானந்த ஸ்வரூபத்தைக் அதில் காண முடியும்
· சீரடி மண்ணின் தூசியை உன் நெற்றியில் இட்டுக் கொண்டால் உன் அனைத்து வேலைகளிலும் நான் உதவுவேன்
· நீ ஆரத்தியில் ஏழும் மணி ஓசையைக் கேட்கும்போது , அந்த ஓளி உன் காதில் சாயி , சாயி என ஒலிப்பதைக் காணமுடியும்
· என்னை நீ ஒரு வெள்ளி இருக்கை மீது அமர வைத்திருந்தால் , உனக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்
· இந்த பிரேரணாவை ( மன நிலையை ) என் ஆலயத்தில் வைக்கும் பொழுது உன்னை நான் என்றும் பாதுகாத்து நிற்பேன்
· இந்த பிரேரணாவை நீ தினமும் காலையிலும் மாலையிலும் படிக்கும்போது என்னை பற்றி எழுதும் எழுத்தாளனாக உன்னை மாற்றுவேன்
· இந்த பிரேரணாவில் நீ என்னுடைய உணர்வுகளை உணர முடிந்தால் , உன்னை நான் ஆத்ம உணர்வு கொண்ட மனிதனக்குவேன் .
· இந்த பிரேரணாவின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் , உன்னை தினமும் என்னை வணங்க வழி செய்வேன்
· என்னுடைய இந்த புனித இடத்தில் , தூய்மையுடன் நீ இருந்தால் உன்னையும் கங்கையைப் போல தூய்மையவனாக ஆக்குவேன் .


பாகம் -8

· என்னைபற்றிய அனைத்தையும் நீ எடுத்துக் கூறி வந்தால் உன்னுடைய பேச்சுக்களில் நல்லவை , தீயவை பற்றி எடுத்துக் கூறும் திறமை வரும்
· நீ என் வேலைகளை செய்து வந்தால் , நான் உன் வேலைகளை செய்வேன்
· நீ என்னை பகவான் ராமராகப் பார்த்தால் , உன்னால் மாயையை வெல்ல முடியும்
· நீ எனக்கு அணிகலன்களை அணிவித்தால் உன்னை மிக அழகுள்ளவனாக மாற்றுவேன்
· என்னையே நீ உன்னுடைய பாதுகாவலனாக நினைத்தால் , உன்னை நான் நிச்சயமாகப் பாதுகாப்பேன்
· என் முன் அமர்ந்துகொண்டு ராம நாமம் ஜெபித்தயானால் , தர்மம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ள வழி செய்வேன்
· என்னை நீ ராமானாகவும் , ரஹீமாகவும் பார்த்தால் உனக்கு தர்மம் என்ன என்பதை புரிய வைப்பேன்
· என்னை இந்த உலகை காப்பவனாகவும் , அனைத்தையும் கொடுப்பவனாகவும் எண்ணிப் பார்த்தால் உனக்கும் அனைத்தையும் தந்து உன்னை காப்பேன்
· என்னை சீரடியின் மகானாகப் பார்த்தால் என்னிடம் நீ அடைக்கலம் ஆகிவிட்டவனாகக் கருதுவேன்
· என்னிடம் எப்போதும் பக்திபூர்வமாக இருந்தால் உனக்கு பிறப்பில் இருந்தும் மரணத்தில் இருந்தும் விடுதலைத் தருவேன்
· ஷீரடியை நீ புனிதத் தலமாகக் கருதினால் நீயே என்னுடைய பக்தனாவாய்


பாகம் -9

· என்னுடைய பாதங்களை நீ வணகினால் அதில் திருவேணி எனப்படும் பிரயாக் நதியைக் காட்டுவேன்
· என்னுடைய சிலை உனக்கு ஆறுதலைத் தருவதுபோல நீ உணர்ந்தால் உனக்கு முடிவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் நான் தருவேன்
· என்னை நீ தொடர்ந்து வணங்கி வந்தால் ஒழுக்கமான முறையில் வணங்குவதை உனக்கு நான் கற்றுத் தருவேன்
· உன்னை காப்பவனாக என்னை நினைத்து நீ அபிஷேகம் செய்தால் ஒவ்வொரு அபிஷேகத்தின் பொழுதும் உன்னுடைய பாதுகாவலனாக நான் மாறுவேன்
· என்னையே நீ அனைத்து கடவுளாக எண்ணிப் பார்த்தால் நான் உனக்கு அனைத்துக் கடவுளுமான ஒரே கடவுளாக நான் மாறுவேன்
· சாயி மந்திரத்தை சிரத்தையாக செய்தால் மந்திரத்தின் பொருளை உனக்கு உணர்த்துவேன்
· நீ என்னை பற்றிய அனைத்து விஷயங்களையும் படித்து தெரிந்து கொண்டால் உன்னை ஞானம் உள்ளவனாக்குவேன்
· நீ என்னிடம் அன்பு செலுத்தினால் உன்னை என் நிழலில் வைத்திருந்து பாதுகாப்பேன்
· என்னை உன் குருவாகக் கருதினால் உனக்கு குரு மந்திரத்தை உபதேசிப்பேன்
· என்னை ஒரு யோகியாகப் பார்த்தால் உன்னால் இந்த அழிவற்ற உலகின் தெய்வீகத்தை பார்க்க முடியும்
· உடி எனும் வீபுதியை நீ மருந்தாகப் பார்த்தால் , உன்னுடைய அனைத்து நோய்களையும் விலக்குவேன்
· என்னை ஜோதியாகப் பார்த்தால் , எந்த ஒரு எரியும் விளக்கின் ஒளியிலும் என்னைப் பார்க்க முடியும் .


பாகம் -10

· விளக்குகள் அனைத்தையும் நான் என் கைகளால் எற்றுவதாக நீ கருதினால் , அனைத்து விளக்கிலும் கடவுளைக் காணலாம்
· மற்ற மதத்தினருடன் நீ ஒற்றுமையாக வாழ்ந்தால் அனைவரையும் உன்னுடைய நெருக்கமானவர்களாக மாற்றுவேன்
· சாயிராம் என்பதையே நினைத்திருந்தால் நீ செய்யும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்
· நீ எனக்காக அன்னதானம் செய்தால் நீ தந்த ஒவ்வொரு பருக்கைக்கும் உனக்கு நல்லதை தருவேன்
· என்னுடைய சமாதியை உன் கரங்களினால் தொட்டு வணங்கினால் உனது விதி ரேகைகளை மாற்றி அமைப்பேன்
· என் சமாதியில் சாயி ராம் சாயி ராம் என நீ குரல் எழுப்பினால் என்னுடைய ஆலயத்தின் அனைத்து சுவர்களிலும் சாயி ராம் என்ற உணர்வு ஒலிப்பதை நீ காணலாம்
· என்னுடைய சமாதியில் நீ சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினால் நீ என்னால் முழுமையாக ஏற்கப்பட்டு விட்டதாகக் கருதுவேன்
· என்னுடைய புனித இடங்களில் நீ தாராளமாகத் தானம் செய்தால் அதை மிகவும் நல்ல செயலாகவே கருதுவேன்
· என்னுடைய ஆரத்தியின் பொழுது நீ கைகளை தட்டிக் கொண்டு இருந்தால் அந்த கைகளின் உள்ளே தெய்வீகத்தை தருவேன்
· எனக்கு முன்னால் நீ நடனமாடினால் , அந்த நடனத்தின் இசை கருவிகளின் கீதமாக நான் இருப்பேன்
· என்னிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டால் உன்னுடைய இதயத்திற்கு வலிமை சேர்ப்பேன்
· ராமநவமி பண்டிகையை நீ கொண்டாடினால் நீ கொண்டாடும் அனைத்து பண்டிகைகளிலும் நான் இருப்பேன்
· என் ஆலயத்தை சுற்றி நீ நடந்து வந்து வணங்கினால் அது உன்னுடைய அனைத்து கடவுட்களையும் வணங்கியதற்கு சமமாகிவிடும் .


பாகம் -11

· நான் பேசிய ஒவ்வொரு சொல்லையும் உலகத்துக்கு எடுத்துரைத்தால் என்னுடைய வார்த்தைகள் உனக்கு மன அமைதி தரும்
· நீ மனதார , இதயபூர்வமான சிரத்தையுடன் என்னை வணங்கி வந்தால் உனக்கு ஆன்மீக சந்தானத்தை தருவேன்
· கங்கை நதிபோன்ற என்னைப் பற்றிய நினைவில் மூழ்கினால் இந்த உலகின் சம்சாரக் கடலில் இருந்து உன்னை கரை ஏற்றுவேன்
· குரு மந்திரத்தை என்னுடைய புனித இடத்தில் ஓதி வந்தால் ஒவ்வொரு மந்திரத்திலும் குருவைக் காண முடியும்
· நீ கண் உறங்காமல் சீரடியில் என்னை இரவு முழுவதும் பூஜித்தால் அதன் பயனை உனக்கு நான் உணர்த்துவேன்
· என் முன் அமர்ந்துகொண்டு உன் துயரத்தைக் கூறினால் உன்னுடைய அனைத்து துயரத்தையும் ஆனந்தமயம் ஆனதாக மாற்றுவேன்
· எனக்கு ஒரு மாலை ரோஜாவை அணிவித்தால் உன் வாழ்கையை மணமுள்ளதாக மாற்றுவேன்
· என்னுடைய புனித இடத்தில் வந்து தீபம் ஏற்றினால் உன் வாழ்விலும் ஒளியை ஏற்றுவேன்
· என்னுடைய அனைத்து பக்தர்களுக்கும் நீ பிரசாதம் தந்தால் உன்னை நல்லொழுக்கம் உள்ளவனாகுவேன்
· என்னுடைய புனிதக் கட்டைவிரலை நீ துதித்தால் குருபூர்ணிமா என்ற புனித பண்டிகையின் பலனைத் தருவேன்
· என் முன் நின்று ஓம் என்ற மந்திரத்தைக் கூறினால் இந்த உலகின் அனைத்து ஆனந்தத்தையும் உனக்கு நான் தருவேன்

சனி, 5 ஜூன், 2010

ஸ்ரீ சாயி ஸ்மரணை

வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
பக்தர் உம்மை அழைக்கின்றோம்!
விருப்பம் ஈடேற வேண்டும்!
பக்தி பலமுற வேண்டும்!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

துக்கம் போக்க வாரும் சாயி!
ஆனந்தம் அளிக்க வாரும் சாயி!
சேய் உம்மை அழைத்தேன் சாயி!
தாய் மனதோடு இலகுவாய் சாயி!
வாரும் சாயி,வாரும் சாயி!

கீர்த்தனம் சாயி, பூஜை சாயி!
வாழ்வும் சாயி, வளமும் சாயி!
ஆனந்தம் சாயி, செல்வம் சாயி!
அற்புதம் சாயி,அபயம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

ஷீர்டி வாசி எங்கள் சாயி!
பக்தரின் இனிய அன்பர் சாயி!
கருணைக் கடலே எங்கள் சாயி!
அருள் பார்வை பாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

கிழக்கும் சாயி,மேற்கும் சாயி!
வடக்கும் சாயி,தெற்கும் சாயி!
எத்திசையில் நீ இருந்தாலும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

ஹிந்து சாயி, முஸ்லிம் சாயி!
ஜீவன் சாயி,யாத்திரை சாயி!
யேசு சாயி, குருநானக் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

தர்மம் சாயி ! கர்மம் சாயி!
தியானம் சாயி!தானம் சாயி!
தூணிலும் சாயி துரும்பிலும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

திருப்தி சாயி முக்தி சாயி!
பூமி சாயி ஆகாயம் சாயி
சாந்தி சாயி ஓம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

சத்யம் சாயி, சிவம் சாயி!
சுந்தரம் சாயி ஈச்வரன் சாயி!
இரக்கம் சாயி எளியவர் சாயி!
அன்பு சாயி அமைதி சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

சக்தி சாயி பக்தி சாயி!
சிவன் சாயி விஷ்னு சாயி!
ப்ரஹ்மா சாயி பஞ்சபூதம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

ஸ்ரீ சாயி பாபா பாமாலை

ஷீர்டியே உலகின் அழகிய புனிதத்தலம்
ஸ்ரீ சாயிபாபா அவதரித்து அருளிய தலம்
கல்பதருவினும் பேறு பெற்ற வேப்ப மரம்
அதன் மடியில் அமர்ந்தாரே இறைவனின் வரம்
பதினாறு வயதே நிரம்பிய பாலகனாம்
பல சூரிய சந்திரர் சேர்ந்த ஒளிப்பிழம்பாம்
ஞானம் அழகு நிறைந்த ஆண்டவர் மகனாம்
நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம்
திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய்
தேஜஸ், ஸௌம்யம் நிறைந்த உருவமாய்
வெய்யில்,மழை பாராமல் தவமும் செய்தாய்
பாலகன் ரூபத்திலே உலகில் தோன்றினாய்
உன் தாய் தந்தை குலம் யாரும் அறியாரே
உலகம் என் வீடு,இறை என் தாய் என்றாயே
சிலர் மொழிந்தனர் நீ சிவனின் ரூபம்
சிலர் அறிந்தனர் நீ விஷ்னுவின் ரூபம்
தத்தாத்ரேய ரூபமோ? ஸ்ரீ ராமனே நீ தானா?
பீர் அவுலியாவோ? பரப்ரஹ்மமே நீ தானோ?
எந்த ரூபமானாலும் நீயே எங்கள் தெய்வமானாய்
பக்தனின் இஷ்ட ரூபத்திலே தரிசனமும் அளிப்பாய்
எத்தனை எத்தனை லீலைகள் புரிந்தாய்
எண்ணற்ற ஏழைகளின் துன்பங்கள் துடைத்தாய்
தெவிட்டாத இன்பமன்றோ உந்தன் திருக்கதை தான்
கேட்பவரும் திளைப்பரே கானில் தேனருவி தான்
மத, ஜாதி பேதங்களால் அழியும் மானிடம்
உய்வுற உறவுப்பாலம் அமைத்த மஹாஅவதாரம்
சாந்த் படீலின் குதிரையை தேடித் தந்தாய்
திருமண வீட்டாரோடு ஷீர்டியை அடைந்தாய்
ஆன்மீகத் தேடலில் அனைவரையும் அழைத்தாய்
அருளோடு சேர்த்து அற்புத அனுபவங்களும் தந்தாய்
மசூதித்தாயாம் துவாரகாமாயி!அதில் வசித்து,
பக்தர்களை ரட்சிக்கும் நீஅன்னையன்றோ? சாயி
திருகரமளித்த உதி அருமருந்தாகும் - உன்
திருஅருட்பார்வை என் துயரினை போக்கும்
அருள் துனியில் எங்கள் பாபங்கள் தூசாகும்-உன்
திருப்பாதங்கள் தொட்ட ஷீர்டி சொர்க்கமாகும்
அடைக்கலம் புகுந்தோரை அன்புடன் ரட்சித்தாயே-உன்
அற்புத லீலைகள் அமுதே!அமுதினும் இனிய பேரமுதே
நீருற்றி அகல் தீபங்கள் எரியச் செய்தாய்
ஒளிஜோதியிலே அஞ்ஞான இருள் களைந்தாய்
பக்தனின் கண்கள் நீர் சொறிந்தாலே அக்கணமே,
துயர் துடைக்க அவன் அருகில் நிற்பாயே
தாமு அண்ணா ஜாதகத்தில் ஒரு கோளாறு
வருந்தி அழுதார் இல்லையே புத்திரப்பேறு
உன் திருவடி அடைந்தார்க்கு இல்லை ஜாதகமே
அளித்தாய் மாங்கனிகள்அடைந்தார் தாமு சந்தானமே
விதியையும் மீறுமே உன் அற்புத அருளுமே
நம்பிக்கையுடன் பக்தன் உன்னை பணிந்திட்டாலே
சிவபக்தன் மேகாவையும் நீ சினந்தாயே,
உன்னை முஸ்லிம் என்று பேதம் கொண்டதாலே
பக்தருக்குள்ளே இல்லை ஏற்றத்தாழ்வே
மேகாவுக்கும் நீ இரக்கம் காட்டினாயே
உள்ளேயே அவனை நீ உருமாற்றினாயே
உன்னில் சிவம் கண்டு அவன் இறை அடைந்தானே
கங்கை, யமுனை நீர் உன் பாதத்தில் சொறிந்தாயே
தாஸ்கனுவின் ப்ரயாகை தாகம் தணித்தாயே
மசூதியில் அமர்ந்து நீ அளித்தாய் ஞானோபதேசம்
பசியுற்றோருக்கு செய்வீர் அன்னதானம்
ஏழைகள் மேல் இரக்கம் கொள் என்றாயே
ஷீர்டியின் கல்,புல் கூட பேறு பெற்றதே
உன் திருவடி முத்தமிட்டு இறைவனை அடைந்ததே
அப்புல்லும், கல்லுமாய் நானிருந்தாலே-உன்
திருவடியை என் சிரஸேந்தி களித்திறுப்பேனே
எத்தனை தவம் செய்தேன் நான் அறியேனே
இக்கணம் உனைத்தொழும் பேறு பெற்றேனே
இறையருள் பெற்ற மனிதரால் மட்டுமே
உன்னை பூஜிக்கும் பாக்கியம் கிட்டிடுமே
உன் அருட்பார்வை என்மேல் பட்டாலே
என் தீவினை போய் ஆனந்தம் நிறைந்திடுமே
உன் மென்கரங்கள் என் சிரஸின் மேல் வைப்பாயே
உத்தமன் நினைத் தொழுகின்றோம் செவிமடுப்பாயே
உன் பாதாரவிந்தம் தொட்ட தூசு ஒன்று போதுமே,
என் கண்களிலே ஒற்றிக் கொண்டாடிடுவேனே
உன் பதகமலத் தீர்த்தம் என் நாவில் பட்டாலே
நான் பெற்ற இன்பத்தை பாடிக் களித்திடுவேனே
என் கனவினில் என்னை ஆட்கொள்வாயே
நிஜந்தனிலே நிதமும் என் துனை நிற்பாயே
அணுவிலும் அணுவானாய்,அகில அண்டமும் நீயானாய்
எங்கெங்கு நோக்கிலும் நீயே நிற்கின்றாய்
என் அன்னை நீ! தந்தை நீ! இவ்வுலகையே!
மூவடியாய் அளந்திட்ட திருமாலும் நீ
அகிலம் உன் இல்லம்,அண்ட சராசரம் உன் ரூபம்
அடியார்க்கு அருள அல்லவா நீ எடுத்தாய் அவதாரம்
குசேலனையும் குபேரனாக்கும் சக்தி இருந்துமே.
உன் உணவை பிச்சை எடுத்து உண்டாய்
சாயி நாமமே போக்கிடும் பல துக்கங்கள்
சாயி நாமமே அளித்திடும் பரம சுகங்கள்
சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்டாலே
சாயி நாமம் நல்கும் பல நன்மைகளுமே
நோயுற்றோர் பிணி வேதனை நீங்கிடுமே
துயருற்றோர் துன்பங்கள் தொலைந்திடுமே
சாயி கிருபையால் தரித்திரம் மறைந்திடுமே
சாயி விரதத்தால் சுகம் , சாந்தி வீட்டில் நிலவிடுமே
சாயி நாமம் தினமும் ஜபித்தாலுமே,
ஒன்பது வியாழன் சாயி விரதம் பூண்டாலுமே,
சாயி வருவார்,இரங்குவார் நம்மிடமே,
துன்பம் களைவார்,தருவார் ஆனந்தமே,
சாயியே சாச்வதம்!சாயியே சத்தியம்!
இதை நம்புபவன் வாழ்விலில்லை பெருந்துன்பம்
சாயியே பரமேஸ்வரன்,சாயியே பரமாத்மன்
சாயியே பராசக்திரூபன்,சாயியே பரந்தாமன்
நம்பிக்கை பக்தி ,பொறுமையுடன் சரணடைவோம்
சாயி அருளால் பரப்ரஹ்மானந்தம் அடைவோம்
ஸ்ரீ சாயிநாதருக்கே அர்ப்பணம்.

ஸ்ரீ தத்தாத்ரேய பாவனி

ஜய யோகீஸ்வர தத்த தயாளா,
ஜகத்தினை ஆக்கிய மூலாதாரா
அத்ரி அநுசூயா கருவியாய் கொண்டாய்,
ஜக நன்மைக்காகவே அவதரித்தாய்
பிரம்மா, ஹரிஹரரின் அவதாரம்,
சரணாகதர்களின் பிரணாதாரம்
அந்தர்யாமி,சத்சித் ஆனந்தன்,
பிரசன்ன சத்குரு இருதோளுடையன்
அன்னபூரணி யை தோளில் வைத்தாய்,
சாந்தி கமண்டலம் கரமேந்தினாய்
நாலு,ஆறு பல தோளுடையான்,
அளவிலா ஆற்றலுடைய புஜமுடையான்
நின்சரண் புகுந்தேன் அறியாமூடன்,
வாரும் திகம்பரா ! போகுதே பிராணன்
அர்ஜுனனின் தவக்குரல் கேட்டு கிருதயுகத்திலே,
அக்கணமே பிரசன்னம் ஆனாயே
அளவிலா ஆனந்தம்.சித்தி அளித்தாய்,
முடிவில் பரம பத முக்தியும் அளித்தாய்
இன்று எனக்கருள ஏன் இத்தனை தாமதம்?
உனையன்றி எனக்கில்லை புகலிடம்
விஷ்ணுசர்மா பக்திக்கிரங்கினாய்,
அவனளித்த சிரார்த்த உணவு அருந்தி ரட்சித்தாய்
ஜம்ப அசுரனால் தொல்லை தேவருக்கே,
தயை புரிந்தாய் நீ அமரருக்கே
மாயை பரப்பி திதிசுதனை,
இந்திரன் கரத்தால் வதம் செய்வித்தாய்
அளவிலா லீலைகள் புரிந்தாயே,
அவற்றை வர்ணிக்க இயலுமோ சிவரூபனே
நொடியில் ஆயுவின் புத்திர சோகம் போக்கினாய்,
மகனை உயிர்ப்பித்து பற்றற்றவனாக்கினாய்
சாத்யதேவ,யது,பிரஹ்லாத,பரசுராமருக்கே,
போதித்தாய் நீ ஞானோபதேசமே
அளவிலா ஆருள் ஆற்றல் உடையோனே,
என் குரல் கேட்க ஏன் மறுத்தாயே
உன் தரிசனம் காணாமல் நானுமே,
இறுதி காணேன்,வாரீர் இக்கணமே
த்விஜஸ்திரீயின் அன்பை மெச்சினாயே,
பிறந்தாய் நீ அவளின் மகனாகவே
ஸ்மர்த்துகாமி, கலியுக கிருபாளனே,
படிப்பறியா வண்ணானை உய்வித்தாயே
வயிற்று வலியில் துடித்த அந்தணனை காத்தாயே
வல்லபேசனை கயவ காலனிடமிருந்து காத்தாயே
என்னைப்பற்றிய அக்கறை உனக்கில்லையே,
என்னை நினைப்பாய் ஒரு முறையேனுமே
தழைக்கச் செய்தாயே உலர்ந்த பட்டமரம்,
என்னிடம் ஏன் இத்தனை உதாசீனம்
முதிய மலட்டு பெண்ணின் கனவினையே,
சேய் அளித்து பூர்த்தி செய்தாயே
அந்தனின் வெண்குஷ்டம் நீக்கினாயே,
அவன் ஆசைகளை நிறைவு செய்தாயே
மலட்டெருமையை பால் சொறிய வைத்தாய்,
அந்தணனின் தரித்திரம் போக்கினாய்
அவரைக்காய் பிச்சையாய் ஏற்றாய்,
அந்தணனுக்கு தங்கக்குடம் அளித்தாய்
பதி இறந்த பத்தினியின் துயர் துடைத்தாய்,
தத்தன் உன்னருளால் உயிர்த்தெழுந்தான்
கொடூர முன்வினையைப் போக்கினாய்,
கங்காதரனின் மகனை உயிர்ப்பித்தாய்
மதோன்மத் புலையனிடம் தோற்றனரே,
பக்த திரிவிக்ரமரை ரட்சித்தாயே
பக்த தந்துக் தன்னிஷ்டப்படியே,
ஸ்ரீ சைலம் அடைந்தான் இமைப்பொழுதிலே
ஒரே நேரத்தில் எடுத்தாய் எட்டு ரூபங்களே,
உருவமற்றும் பலரூபமுடையவனே
தரிசனம் பெற்று தன்யமானரே,
ஆனந்தம் அடைந்த உன் பக்தருமே
யவனராஜன் வேதனை நீக்கினாயே,
ஜாதிமத பேதம் உனக்கில்லையே
ராம கிருஷ்ண அவதாரங்களிலே,
நீ செய்த லீலைகள் கணக்கில்லையே
கல்,கணிகை,வேடம்,பசு,பட்சியுமே.
உன்னருளால் முக்தி அடைந்தனரே
நாமம் நவிலும் வேஷதாரியும் உய்வானே,
உன் நாமம் நல்காத நன்மையில்லையே
தீவினை,பிணி துன்பம் தொலையுமே,
சிவன் உன் நாமம் ஸ்மரித்தாலே
பில்லி, வசிய தந்திரம் இம்சிக்காதே,
ஸ்மரணையே மோட்சம் தந்திடுமே
பூத,சூனிய,ஜந்து அசுரர்,ஓடிடுமே,
தத்தர் குண மஹிமை கேட்டதுமே
தத்தர் புகழ் பாடும் தத்த பவானியையே,
தூபமேற்றி தினம் பாடுபவனுமே
இரு லோகத்திலும் நன்மை பெறுவானே,
சோகம் என்பதை அறியானே
யோக சித்தி அவன் அடிமையாகுமே,
துக்க தரித்திரம் தொலைந்திடுமே
ஐம்பத்திரு வியாழக்கிழமை நியமமுடனே,
தத்த பவானி அன்புடன் படித்தாலே
நிதமும் பக்தியுடன் படித்தாலுமே,
நெருங்கான் அருகில் காலனுமே
அநேக ரூபமிருந்தும் இறை ஒன்றே,
தத்துவமறிந்தவனை மாயை அண்டாதே
ஆயிரம் பெயரிருந்தும் நீ ஒருவனே,
தத்த திகம்பரா நீ தான் இறைவனே
வந்தனம் உனை செய்வேன் பலமுறை நானுமே,
வேதம் பிறந்தது உன் மூச்சினிலே
சேஷனும் வர்ணித்து களைப்பானே,
பல ஜன்மமெடுத்த பாமரன் எப்படி வர்ணிப்பேனே
நாமம் பாடிய அனுபவம் திருப்தி தந்திடுமே,
உனை அறியாமூடன் வீழ்ந்திடுவானே
தவசி தத்வமசிஅவன் இறைவனே,
பாடு மனமே ஜயஜயஸ்ரீ குருதேவனே
பாவனி - ஐம்பத்திரு பாட்டு வரிகள்
ஸ்மர்த்துகாமி - ஸ்மரித்தவுடன் ஓடி வருபவர்
திதிசுதன் ராக்ஷஸன்
அர்ஜுனன் - ஸஹஸ்ரார்ஜுனன்
த்விஜ - இருமுறை பிறவி எடுத்த அந்தண வைசிய
க்ஷத்திரிய குலத்தோர்

ஒன்பது வியாழக்கிழமை சாயி விரத விதிமுறைகள்

1). இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

2) விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.

3) எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்தித்துக் கொள்ள வேண்டும்

4) காலை அல்லது மாலை சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும்.
இந்த விரதத்தைபழ,திரவியஆகாரங்கள்(பால்,டீ,காபி,பழங்கள்,இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும்.அப்படி நாள் முழுவதும் செய்யமுடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை(மதியமோ,இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது

5) ஓரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாயி பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்

6)மஞ்சள் நிறமலர்கள் மாலை சாயிபாபா படத்திற்கு அணிவித்து,தீபம்,ஊதுபத்தி ஏற்றி ,பிரசாதம்.(பழங்கள், இனிப்புகள்,கற்கண்டு எதுவானாலும்) நைவேத்தியம் வைத்து,விநியோகம் செய்து சாயி பாபாவை ஸ்மரணை செய்யவும்.

7. முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாயி பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாயி விரத கதை, சாயி பாமாலை, சாயி பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும்.

8) வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

9) விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொருவியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்
விரத நிறைவு விதிமுறைகள்

1) ஒன்பதாவது வியாழக் கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும் (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ,உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.

2) சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9ஆவது வியாழக் கிழமை இந்த சாயி விரத புத்தகங்l நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்,சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும்( 5 அல்லது11அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).

3) விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும்.இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும்

4) மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும்,விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.

இது சாயி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .

ஸ்ரீ சாயி விரத கதை (Sri Sai Vratha Kathai)

நீண்ட நாட்களுக்கு பின் சாயி விரத கதை இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. பிரியா நாகரத்தினம் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இதை தமிழில் தட்தெழுத்து செய்து (ட்ய்பிங்) செய்து அனுப்பி உள்ளார். சாயி விரத கதை அனைத்து மொழிகளிலும் வந்து விட்டது. இதை படித்து சாயியின் பக்தர்கள் பலனடையட்டும். பிரியா நாகரத்தினம் அவர்களுக்கு நமது நன்றி.


கோகிலா என்னும் பெண்மணியும் அவர் கணவர் மஹேஷும் குஜராத்தில் ஒரு ஊரில் வசித்து வந்தனர். இருவரும் மிகவும் அன்யோன்யமாக இருந்தனர். ஆனால் மஹேஷ் அவர்களோ சுபாவத்தில் சண்டைகாரராக இருந்தார்.வரை முறையற்ற பேச்சு சிடுமூஞ்சித்தனம் நிறைந்தவராக இருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரது சுபாவத்தினால் தொல்லை அடைந்தனர். ஆனால் கோகிலா அம்மாளோ மிகுந்த ஒழுக்க நெறியுள்ள பெண்மணியாக இருந்தார். இறைவன் மேல் தீரா நம்பிக்கை கொண்டு அனைத்தையும் சகித்துக் கொண்டு இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் கணவரின் வியாபாரம் நஷ்டமடைய ஆரம்பித்து நாளடைவில் ஒரேயடியாக வருமானமும் நின்று போய் விட்டது. மஹேஷ் வீட்டிலேயே இருக்கத் துவங்கினார். அதனால் இன்னும் அவர் சுபாவம் மோசமடைய ஆரம்பித்தது. முன்பை விட அதிக சிடுமூஞ்சி ஆனார்.

ஒரு மதிய நேரம் ஒரு முதிய சாது அவர் வீட்டுக் கதவருகில் நின்றார். முகத்தில் அபூர்வமான ஒளியும்,தேஜசும் நிறைந்து இருந்தது. அவர் கோகிலாவிடம் சாதம்,பருப்பு அளிக்கும்படிக் கேட்டார். கோகிலாவும் சாதம்,பருப்பு அளித்து இரு கை கூப்பி நமஸ்காரம் செய்தார். ”சாதுவும் சாயி உங்களை சுகமாக வைப்பார்” என்று ஆசிர்வதித்தார். கோகிலா அம்மாளூம், “ஐயனே! சுகம்,சாந்தி எங்கள் விதியிலேயே இல்லை போன்று இருக்கிறது.” என்று வருத்தமாகக் கூறித் தன் துன்பம் நிறைந்த கதையைக் கூறினார்.

சாதுவும் சாயிபாபாவின் விரதத்தை பற்றிக் கூறினார். ஒன்பது வியாழக்கிழமைகள் பழ திரவிய ஆகாரங்கள் அல்லது ஒரு வேளை உணவு உட்கொண்டு முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாயி பாபாவுக்கு ஒன்பது வாரங்கள் பூஜை செய்யவும். சாயி விரதம் ஒன்பது வாரம் செய்து விதி முறைப்படி நிறைவு செய்யவும் . ஏழைகளுக்கு உணவு அளித்து சாயி விரத புத்தகங்களை தன்னால் இயன்ற அளவு 5,11,21 என்ற எண்ணிக்கையில் விநியோகிக்கவும். இப்படி சாயி விரதத்தின் மஹிமையைப் பரப்பினால் சாயிபாபா உங்கள் அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றுவார். இந்த விரதம் கலியுகத்திற்கு ஏற்ற மிக உன்னதமான அற்புதங்கள் நிகழ்த்தும் விரதம். இந்த விரதம் கண்டிப்பாக மிகுந்த பலன்கள் அளிக்க வல்லது ஆனால் விரதமிருப்போர் சாயிபாபாவின் மேல் மிகுந்த பக்தியும்,நம்பிக்கையும் வைத்தல் அவசியம். யார் மேற்கூறியபடி விரதமும் நிறைவும் செய்கிறார்கேளா, சாயிபாபா அவர்களுடைய விருப்பங்களை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.

கோகிலா அம்மாளும் ஒன்பது வியாழக்கிழமைகள் விரதம் இருந்து ஒன்பதாவது வியாழனன்று ஏழைகளூக்கு உணவு அளித்தார். சாயி விரத புத்தகங்களை விநியோகித்தார்.அவர்கள் வீட்டில் சண்டை சச்சரவு பெயரளவுக்குக் கூட இல்லாமல் போய் விட்டது. வீட்டில் பெரும் சுகம் ஆனந்தம் நிலவியது. அதேசமயம் மஹேஷின் சுபாவமும் மாறி அவருடைய வியாபாரமும் சூடு பிடித்தது. சிறிது நாட்களிலேயே ஆனந்தமும் செல்வமும் பெருகியது. கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாய் வாழலாயினர்.

ஒரு நாள் கோகிலா அம்மாளின் மைத்துனரும், மைத்துனர் மனைவியும் சூரத்திலிருந்து வந்தனர். பேச்சோடு பேச்சாக தங்கள் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் பரீட்சையில் ஃபெயில் ஆகி விட்டனர் என்றும் வருத்தப்பட்டனர். கோகிலா ஒன்பது வியாழக்கிழமைகள் விரதத்தின் மஹிமை பற்றிக் கூறினார். சாயி பக்தியினால் குழந்தைகள் நன்கு படிக்கத் துவங்குவர். ஆனால் சாயிபாபாவின் மேல் அதீத விஸ்வாசமும், நம்பிக்கையும் வைத்தல் அவசியம். சாயி அனைவருக்கும் அருள் புரிவார் என்று கூறினார்.


அவர் மனைவி விரத முறைகளைக் கேட்டார். கோகிலா கூறலானார்.” ஒன்பது வியாழக் கிழமைகள் பழ திரவிய ஆகாரங்கள் உட்கொண்டு முடியாதவர்கள் ஒரு வேலை உணவு அருந்தி இந்த விரதம் செய்ய வேண்டும் ,முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்கு ஒன்பது வியாழனும் செல்லவும். முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபாபாவுக்கு ஒன்பது வாரங்கள் பூஜை செய்யவும். மேலும் இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாயிபாபா படத்திற்கு பூஜை செய்யவும். மஞ்சள் நிறமலர்கள் மாலை அணிவித்து ,தீபம்,ஊதுபத்தி ஏற்றி ,பிரசாதம் நிவேதனம் செய்து,விநியோகம் செய்து சாயி பாபாவை ஸ்மரணை செய்யவும். சாயி விரத கதை, சாயி ஸ்மரணை, சாயி பாமாலை, சாயி பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும்.

ஒன்பதாவது வியாழக் கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும்
ஒன்பதாவது வியாழக் கிழமை இந்த சாயி விரத புத்தகங்களை இலவசமாக விநியோகிக்கவும்( 5 அல்லது ௧௧ அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).
சூரத்திலிருந்து அவர் மைத்துனர் மனைவியின் கடிதம் சிறிது நாட்களிலேயே வந்தது. அதில் அவர் குழந்தைகள் சாயி விரதம் இருப்பதாகவும் மிக நன்றாக படிக்கத் துவங்கி விட்டனர் என்றும் எழுதி இருந்தார். மேலும் அவரும் இந்த விரதம் இருந்ததாகவும் ,விரத புத்தகங்களைஆபிசில் விநியோகம் செய்ததாகவும் எழுதி இருந்தார். அதை பற்றி அவர் எழுதுகையில் அவர் தோழி சாருவின் மகளுக்கு சாயி விரத பலனாக மிக நல்ல இடத்தில் வரன் அமைந்து நல்ல விதமாக திருமணம் நடந்தது. அவர் பக்கத்து வீட்டில் வசிப்பவரின் நகைப்பெட்டி தொலைந்து போய் இருந்தது. அவரும் சாயி விரதம் இருந்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நகைப்பெட்டி திரும்பக் கிடைத்து விட்டது. (யார் திரும்ப கொண்டு வைத்தார் என்று தெரியாது) இப்படி பல அற்புதங்கள் நடந்தன.
கோகிலா அம்மையாரும் சாயி விரத மஹிமையை நன்கு புரிந்து கொண்டார்.
ஓ !சாயி! இப்படி எல்லோர் மேலும் பொழியும் ¸உன் அன்பை என் மேலும் பொழிவீராக!

தட்ஷணையின் மகிமை

ரீனா எனும் பக்தையின் அனுபவம்

நான் அமெரிக்காவில் வசிக்கின்றேன். நானும் என்னுடைய கணவரும் சாயி பாபாவை நம்புபவர்கள். அவரை உண்மையான மனதுடன் வணங்குபவர்கள். 2007 ஆம் ஆண்டு கருவுற்று இருந்த எனக்கு பன்னிரண்டாவது வாரத்தில் கரு சிதைவு ஏற்பட்டது. எங்களுக்கு வயது முப்பது ஆகி விட்டதினால் ஏழு மாதங்களுக்குப் பின் குழந்தை வேண்டும் என்பதற்காக ஒரு மருத்துவரை அணுகினோம் .அதற்கு சில சோதனைகளை செய்ய வேண்டும் எனவும் அதற்கான செலவு சுமார் நாலாயிரம் டாலர் அதாவது ஒரு லட்சத்து தொண்ணுற்றி இரண்டு ரூபாய் ஆகும் என்றார். எங்களிடம் இருந்த காப்பீடு (இன்சுரன்ஸ்) அதை சரி கட்டிவிடும் என் கருதி அதை செய்து கொண்டோம்.

ஆனால் அவர்களோ ஏழு மாதத்தில் அந்த சோதனைகளை செய்து கொண்டால் காப்பீட்டுத் தொகை கிடைக்காது எனக் கூறி விட்டனர். நாங்கள் அதிர்ந்து போனோம். அத்தனை பெரிய தொகையை எப்படி சேர்த்து வைத்துள்ள பணத்தில் இருந்து திருப்புவது? வியாபார ரீதியான காப்பீடு திட்டத்தில் அனாவசியமாக சேர்ந்து நாங்கள் ஏமார்ந்து விட்டோம் என் எண்ணி வருந்தினோம்.


அதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் நான் எனக்கு ஒரு பிராஜக்ட் கிடைத்தால் சாயிபாபாவின் ஆலயத்துக்கு ஆயிரம் டாலர் கொடுபதாக வேண்டிக் கொண்டு இருந்தேன். 2008 ஆம் ஆண்டு எனக்கு ஒரு நல்ல பிராஜக்ட் கிடைத்தது. அந்த பிராஜக்ட் முடிந்து பணமும் வந்துவிட்ட வேளையில்தான் அந்த நஷ்ட செய்தியும் வந்தது. நான் பாபாவின் ஆலயத்துக்கு பணத்தைத் தருவதா இல்லை சோதனைகளுக்கான பணத்தை திருப்புவதா என் யோசனை செய்தேன். அத்தனை பெரிய பணத்தை ஆலயத்துக்கு தந்துவிட்டால், மருத்துவ செலவுக்கான பணத்தை எப்படி திருப்புவது?


நாங்கள் மனதில் சஞ்சலம் அடைந்தாலும் , வார்த்தையை காப்பாற்றலாம் என முடிவு செய்தோம். இல்லை என்றால் தெய்வ குற்றமாகிவிடும். ஆகவே பாபாவின் ஆலயத்துக்கு பணத்தை அனுப்பிவிட்டோம். பத்து நாட்கள் ஆயின. திடீர் என காப்பீடு கம்பனியில் (இன்சுரன்ஸ்) இருந்து பணத்தை மருத்துவமனைக்கு தந்து விட்டதாக செய்தி அனுப்பினார்கள். முதலில் கொடுக்க மாட்டோம் எனக் கூறியவர்கள், எப்படி எங்களிடம் கூறாமலேயே பணத்தை தந்துவிட்டு எங்களுக்கு செய்தியை அனுப்பி இருந்தனர் என்பது புரியவில்லை. அந்த மாயத்தை என்னவென்று கூறுவது? சாயி சரித்திரத்தில் இருந்தது நினைவுக்கு வந்தது. 'எனக்கு நீ தருவதை விட பல மடங்கு அதிகம் நான் உனக்கு திருப்பித் தருவேன்'.

ஜீவன்களை கொல்ல மாட்டேன்


ஜீவன்களை கொல்ல மாட்டேன்

பாபா உயிருடன் வாழ்ந்து கொண்டு இருந்தபோது அவருக்கு பலரும் பல விதத்தில் பணிவிடை செய்து வந்தனர். அந்த ஊரிலேயே இருந்தவர்கள் தினமும் அங்கு வந்து துவாரகாமாயியை பெருக்கி துடைத்தும், பாபா நடக்கும் லேந்தி பாக் என்ற இடத்தை பெருக்கி சுத்தப்படுத்தி தம்மால் முடிந்த அளவு அனைத்தையும் செய்து வந்தனர். என்னுடைய தந்தையும் எப்போது எல்லாம் அவர் சீரடிக்குச் சென்றாரோ அப்போதெல்லாம் பெட்ரோமாஸ் விளக்கை ஏற்றி பாபா கூறிய இடத்தில் வைத்து விடுவார். அது அவருக்கு தரப்பட்டு இருந்த வேலை.

ஒருமுறை சீரடிக்கு சென்றிருந்த பொது அவர் பாபாவிடம் இனிமேல் தான் பெட்ரோமாஸ் விளக்குகளை ஏற்றப் போவது இல்லை எனவும், அதை ஏற்றியவுடன் இருட்டில் சுற்றித் திரியும் பூச்சிகள் வந்து அதன் மீது மோதி தீயில் விழுந்து மடிந்து விடுவதினால் தனக்கு ஜீவா இம்சை செய்யும் பாவம் பெருகுகின்றது என்று கூறினார். அதற்கு பாபா சிரித்தபடிக் கூறினாராம், ' ஹாய் பஹு , நீ ஒரு முட்டாள். நீ இந்த இடத்தில் விளக்கு ஏற்றாவிட்டால் அவை விளக்கு எரியும் வேறு இடத்துக்குச் சென்று மடியும்.

இந்த உலகில் பிறக்கும் எவருக்குமே பகவான் பிறப்பையும் இறப்பையும் எழுதி வைத்தே அனுப்புகின்றார். அப்படி அவை விளக்கில் மடியவில்லை என்றாலும், வேறு ஏதாவது பூச்சிகள் அவற்றை கொன்றுவிடும். இதுவே நியதி. அதனால் விளக்கை எற்றும் உனக்கு எந்த விதத்திலும் பாவம் சேராது. நீ இப்படி நினைப்பதில் இருந்தே உன் கருணை உள்ளம் தெரிகின்றது . எவருக்கு என்ன விதி என பகவானே தீர்மானித்து அனுப்புகின்றார். பூச்சிகளை படைத்து அவற்றின் வாழ்வை தீர்மானிப்பவர், உன்னை படைத்த போதும் உன்னுடைய வேலையை தீர்மானித்தே அனுப்புகின்றார். அவருடைய செயலை குறை கூறவோ, அதை மீறவோ நமக்கு உரிமை இல்லை. நீ உன் கடமையை செய்து கொண்டு இரு.

அல்லா உனக்கு கருணை புரிவார்' என்றார். இப்படியாக பாபா அனைவருக்கும் புரியும் விதத்தில் மிகவும் தெளிவான பதிலை தருவது வழக்கம்.

புதன், 2 ஜூன், 2010

பாடல்

http://ilayaraja-mp3songs.blogspot.com/2009/12/sri-shirdi-sai-baba-tamil-songs.html

பல கதைகள்

http://www.blogcatalog.com/blogs/shirdi-sai-baba-tamil-stories.html

ஸ்ரீ கேஷவ்ராஜ் பாபா சாஹேப் சீரடி சாயி பாபாவின் குரு

ஸ்ரீ கேஷவ்ராஜ் பாபா சாஹேப் சீரடி சாயி பாபாவின் குரு

அன்பானவர்களே
நான் ஒரு முறை பயணம் செய்து கொண்டு இருந்த போது சீரடி சாயி பாபாவின் சில புத்தகங்களை படிப்பதற்கு எடுத்துச் சென்று இருந்தேன். அதில் ஒன்று தாஸ் குண மகராஜ் என்பவர் எழுதி இருந்த பாபாவின் போதனைகள் என்பதும். அதைப் படித்த எனக்கு அமிருதத்தைப் பருகியது போல இருந்தது. அதை மற்றவர்களும் படித்து ஆனந்தம் அடைய வேண்டும் என விரும்புகின்றேன். ஆகவே முதலில் கேஷவராஜ் பாபா சாஹேப் என்பவரே சாயி பாபாவின் குரு என தாஸ் குண மகராஜ் கூறியுள்ளதை பற்றி எழுதுகிறேன். தாஸ் குண மகராஜ் அவ்வாறு கூறியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதினால் அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. சாயிபாபாவையும் அவருடைய குருவையும் இணைக்கும் பாலாம் தாஸ் குண மகராஜ் மட்டுமே. சான்தகாமுருத் என்ற புத்தகத்தில் 1908 ஆம் ஆண்டு வெளியானதை ஆதாரமாகக் கொண்டு இதை எழுதி உள்ளேன் .
மனிஷா

சாயிபாபாவின் குரு
சாம்பா என்ற கிராமத்தில் பிறந்தவரே கேஷவராஜ் பாபா சாஹேப். அவருடைய தந்தை கேஷவாவுக்கு நெடுங்காலம் குழந்தை பிறக்கவில்லை என்பதினால் வெங்கடேச பெருமானைப் பிரார்த்தித்துப் பிறந்தவர் அவர்.
வெங்கடேச பெருமான் அவருடைய பக்தியை மெச்சி காசியை சேர்ந்த ராமானந்த சுவாமி என்பவரே அவருக்கு மகனாகப் பிறப்பார் எனக் கூறி இருந்தார். பிறந்த குழந்தையான கோபால ராவ் பெரியவராக ஆனதும் திருமணம் ஆயிற்று . ஆனால் அந்த வாழ்வை அவர் துறந்து விட்டு தவ வாழ்வை மேற்கொள்ள வெளியில் சென்று விட்டார். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவர் 1830 ஆம் ஆண்டு பாராபாரி என்னும் இடத்தில் இருந்த 'சேலு' என்ற இடத்தை வந்தடைந்தார். அந்த இடத்தில் இரண்டு அல்லது மூன்று குடுசைகளே இருந்தன. அவருக்கு அதில் தங்க போதுமான இடம் இல்லை. ஆகவே அவர் பாழடைந்து கிடந்த ஒரு கோட்டை பகுதியை சரி செய்து அதில் இருக்க முடிவு செய்தார். அந்த இடமே தனக்கு சரியான இடம் என அவருக்குத் தோன்றியது. அந்த இடத்தை சரி செய்து அங்கு வாழ்ந்தவர் 'சேலுவில்' பல நன்மைகளை செய்தார். கிட்டத்தட்ட ஒரு ஜமிந்தாராகவே மாறினார். அவருடைய குணம் மிகவும் நல்ல குணமாக இருந்ததினால் அனைவரது மதிப்பையும் பெற்று இருந்தார். ஒருநாள் ஒரு விசித்திர சம்பவம் நடந்தது. அவர் அரண்மனையின் மேல் தளத்தில் இருந்த போது அழகான இளம் மங்கை ஒருவள் பின்புற வாசல் வழியே உள்ளே ஒய்வு எடுக்க வந்தாள். அது சூரியன் மறைந்து கொண்டு இருந்த மாலை நேரம். ஏதேற்சையாக மேல் தளத்தில் இருந்த கோபால்ராவ் அவளைக் கண்டார். அவளுடைய அழகைக் கண்டவர் தன்னை மறந்தார். அவளுடைய அழகே பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தவருக்கு காமஇச்சை தலைக்குமேல் சென்றது. ஒரு கணம் தான். தன நிலைக்கு வந்தார். உடல் முழுதும் நனைந்து விட்டு இருந்தது. நினைத்தார் ' என்ன தவறு செய்து விட்டேன். எவளோ ஒரு முன்பின் தெரியாதவள். அவள் மீது எப்படி எத்தனை இச்சைக் கொண்டேன். இதற்கு தண்டனை பெற்றே தீரவேண்டும்' என எண்ணியவர் பூஜை அறைக்குச் சென்றார்.

' அந்த தவறு செய்த கண்கள் வேண்டாம் ' என முடிவு செய்து அங்கு வைத்து இருந்த ஒரு ஊசியினால் தன்னுடைய கண்களை குத்திக் கொண்டார். அப்படி செய்ததும்தான் அவருடைய மனம் அமைதி அடைந்தது.

கோபால் ராவ் கண்களை குத்திக் கொண்டது அனைவருக்கும் தெரிய வந்தது. அவர் வீடு முன் அனைவரும் வந்தனர். சிலர் அவர் ஒரு பைத்தியம் என நினைத்தனர். ஆனால் அதுவே அவர் மீது மக்களுக்கு இன்னும் அதிக மரியாதையை வைக்கப் போதுமானதாயிற்று. அவருக்கு பலர் பக்தர்களாயினர். அவரை வணங்கலாயினர் . ஒரு முறை ஒரு குருடான பெண்மணி அவரிடம் வந்து கதறி , அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு தனக்குப் பார்வை தருமாறு வேண்டியபோது அவர் சிறிது மிளகாய் பொடியை எடுத்து அவள் கண்களில் போட அவளுக்கு பார்வை கிடைத்தது. அது அவருடைய பெருமையை மேலும் பெருக்கியது.
சாயி பாபா பிறந்த செய்தி
அதன் பிறகு கோபாலராவ் காசிக்குச் சென்றார். அவருடன் வேறு பலரும் சென்று இருந்தனர். அங்கிருந்து அவர் பிரயாக், குருஷேத்ர, விருந்தாவன், கோகுல், மதுரா, துவாரகா, அஹமதாபாத் போன்ற பல இடங்களுக்கும் சென்றார். அஹமதாபாதத்துக்கு சென்ற போது ஒரு மசூதிக்குச் சென்றார். உள்ளே நுழைந்ததும் ' சலாம் அலேகும், முன் பிறவியில் ராமானந்தா என்றவராக இருந்தவரே, சேலுவில் இருந்து பத்து மைல் தூரத்தில் உள்ள பதாரி என்ற கிராமத்தில் கபீர் என்ற உன் சிஷ்யர் பிறந்து உள்ளார் ' என்ற சப்தம் அந்த சமாதிக்குள் இருந்து வந்தது.

அதைக்கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தாலும் கோபால்ராவுக்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. உடனே அவர் அங்கிருந்து கிளம்பி சேலுவிற்குச் சென்றார். ஒரு நாள் பதாரி கிராமத்தில் இருந்து அவரிடம் ஒரு வயதான பெண்மணி தன்னுடன் ஒரு சிறுவனை அழைத்து வந்தார். கோபால் ராவ் அவர்களுக்கு அங்கேயே தங்க புகலிடம் தந்தார். அவருக்கு சமஸ்க்ருத மொழி நன்கு தெரியும். அந்த சிறுவனுக்கும் அதை கற்பதில் சிரமம் ஏற்படவில்லை.
அவனுக்கு யோகாசனங்களையும், தியானப் பயிற்சியையும் தந்தார். அந்த சிறுவனும் மற்றவரைவிட அதிக புத்தி கூர்மையாக இருந்ததினால் அவர் தந்த கல்வியை ஏற்பதில் நேரமே ஆகவில்லை. விரைவாக அவரிடம் இருந்து பலவற்றைக் கற்று அறிந்தான். கோபால்ராவ் முன் பிறவியில் பிரும்ம ஞானி என்பதினால் அவருக்கு பல சீடர்கள் இருந்தனர். அந்த சிறுவன் வந்தது முதல் அவரால் அவர்களுக்கு பயிற்சி கொடுக்க அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போயிற்று. அது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதை அறிந்த கோபாலராவ் அந்த சிறுவனை தான் இருந்த கோட்டைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். பலரும் அந்த சிறுவன ஒரு முஸ்லிம் என நினைத்தனர். ஆனால் கோபால்ராவோ பிராமணர்.

அது இன்னமும் அவர்கள் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரையும் கொல்ல முடிவு செய்து அவர்களைத் தேடி அலைந்தனர். கடைசியாக அவர்கள் இருந்த இடத்தைக் கண்டு பிடித்தனர். அப்போது இரவு நேரம். கோபால்ராவும் அந்த சிறுவரும் ஒரு அறையில் படுத்து இருந்தனர். வந்தவர்கள் அந்த சிறுவனின் தலை மீது அவரை கொல்லும் நோக்கத்துடன் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டனர். அது அவருடைய குருவின் தலையில் விழுந்துவிட்டது.

நல்ல வேளையாக அது அவருக்கு பலத்த காயத்தை மட்டுமே ஏற்படுத்தியது. ரத்தம் கொட்டத் துவங்க அந்த சிறுவன் அவருடைய காயத்துக்கு கட்டுப் போட்டார். ரத்தம் வருவது உடனே நின்றது. சிருவருக்குத் தெரிந்தது, வந்தவர்கள் யார் என்பதும் அவர்களுடைய கோபத்துக்குக் காரணமும். இனியும் தாம் தம்முடைய குருவுடன் இருந்தால் அவருக்கு ஆபத்து ஏற்படும், வந்தவர்கள் அவரைகொல்லாமல் விடமாட்டார்கள் என உணர்ந்தார். ஆகவே அவரை விட்டு தனியாகச் செல்ல முடிவு செய்தார்.

அதே நேரத்தில் கோபால்ராவுக்கும் அனைத்தும் தெரிந்தது. பொறமை கொண்டவர்கள் சிறுவனை கொல்லாமல் விட மாட்டார்கள். தனக்கு இறுதி காலம் வந்து விட்டதை உணர்ந்தவர், கிளம்பிச் சென்றவரை அழைத்தார். அவனுக்கு தனது அத்தனை சக்தியையும் கொடுத்துவிட்டுக் கூறினார் ' உன் சக்தி அனைவருக்கும் தெரிய வேண்டும் . உடனே சென்று பால் கறக்காமல் இருக்கும் மாட்டை பிடித்து பால் சுரக்க வை ' அந்த சிறுவரும் வெளியில் ஓடிச் சென்று கபில என்ற மலட்டு மாட்டைப் பிடித்து அதன் மடியில் இருந்து பால் கறக்க முயன்றார். அதன் சொந்தக்காரன் அது மலட்டு மாடு. அதை விவசாயத்துக்கே பயன்படுத்துகின்றேன் எனுன்போது அது எப்படி பாலைக் கறக்கும்?. அந்த சிறுவன் ஓடிச் சென்ற கோபால்ராவிடம் அது பற்றிக் கூறி கடந்த பத்து வருடங்களாக அது பால் கறக்காத மாடு என்ற உண்மையை தான் தெரிந்து கொண்டதாகக் கூற அவர், ஒரு பத்திரத்தைக் கொண்டு வா, நானே கறந்து காட்டுகின்றேன் எனக் கூறி பத்திரத்தை வங்கி வரச் சொல்லி அதன் மடியில் வைக்க அது மூன்று லிட்டர் பாலை சுரந்தது. அதை எடுத்து அந்த சிறுவனிடம், இந்த மூன்று லிட்டர் பாலும் கர்மா, ஞான, மற்றும் பக்தியை குறிப்பவை. அனைத்தையும் உடனே குடி எனக் கூறி அவரை குடிக்க வைத்து தனது அத்தனை சக்தியையும் அவருக்கு மாறினார். அதன் பின் அவரிடம் கூறினார் ' நீ பூர்வ ஜென்மத்தில் ஒரு கபீராக இருந்தாய். உன் மனைவியை ஒருவரிடம் அனுப்பி குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளச் சொன்னேன். நீ பூர்வ ஜென்மத்தில் பஜனைகளும் செய்து உள்ளாய். ஆகவே இந்த ஜென்மத்தில் மெளனமாக இருக்க வேண்டும். மேலும் நீ இந்த ஜென்மத்தில் பிருமச்சரியத்தை அனுஷ்டித்து, பக்கத்தில் உள்ள ஊரில் ஒரே இடத்தில் தங்கி அனைவருக்கும் நல்லது செய்யவேண்டும்.

அப்படிக் கூறிய பின் தன்னுடைய தலைக் கட்டை அவிழ்த்து அதை அந்த சிறுவனுடைய தலையில் ஒரு பகீஎரைப் போல இருக்குமாறு கட்டி விட்டார். அதன் பின் கோபாலராவ் மரணம் அடைந்து விட்டார். ஆனால் அவருடைய இறந்த தேதி தெரியவில்லை. பாபாவுக்கு அப்போது இருபது வயதாயிற்று. கோபால்ராவுக்கு சேலுவில் சமாதி அமைக்கபட்டது. அதன் அருகில் ஒரு மரம் வளர்ந்துள்ளது. அவருடைய ஏழாவது வம்சாவளியினர் அங்கு உள்ளனர்.
தன்னுடைய குரு இறந்ததைக் கண்ட சிறுவர் திடுக்கிட்டார். அவரே இன்று நமக்கு கருணை புரியும் சாயி பாபா. தன்னால்தானே தன்னுடைய குருவிற்கு மரணம் வந்தது என மனதில் வருந்திய பாபா அதனால் அது முதல் அவருடைய குருவைப் பற்றி எவரிடமும் கூறாமல் இருந்து விட்டார் .

எங்கு நோக்கினாலும் சாயி, சாயிபாபா

எங்கு நோக்கினாலும் சாயி, சாயிபாபா
அன்பானவர்களே
இன்று நாம் சாயி பக்தையான அர்ச்சனாவின் சாயியின் அனுபவத்தைப் படிக்கலாம். தனக்கு வந்த கனவு நிஜமானது பற்றி அவர் கூறி உள்ளதை படிக்கையில் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. மேலே காணப்படும் படம் அர்ச்சனா தானாகவே ஒரு படத்தை தனது கம்ப்யூட்டரில் உரு மாற்றி செய்தது. அவர் முன்னர் எழுதி இருந்த சென்னை சீரடிபுற ஆலயம் பற்றி படிக்க இங்கே கிளிக் (http://www.shirdisaibabatemples.org/2009/05/shirdi-sai-baba-temple-shirdipuram_21.html) செய்யவும்.
மனிஷா
அர்ச்சனாவின் அனுபவம்

எங்கள் வீட்டினர் விடுமுறையில் திருப்பதி செல்ல விரும்பினர். நான் சீரடிக்கு செல்ல விரும்பினாலும் அவர்களோ நீ இப்போதுதானே சமீபத்தில் சீரடிக்கு சென்றாய் எனக் கூறி திருப்பதி பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டனர். நான் பாபாவிடம் தான் சீரடியிலும் உள்ளேன், திருப்பதியிலும் உள்ளேன் என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களின் மனத்தை மாற்றச் சொல்லி வேண்டிக் கொண்டாலும் அது நடக்கவில்லை. பாபா என்ன நினைத்தாரோ?
நாங்கள் செவ்வாய் கிழமை கிளம்புவதாக இருந்தது, ஆனால் அது மாறி புதன் காலை கிளம்பலாம் எனவும், அன்று மாலையே ஏழு மணிக்கு திருப்பதியில் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து உள்ளதாகவும் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் கூறினான். நாங்கள் தரிசனம் செய்ய இருந்த நாள் உகாதி பண்டிகைக்கு முதல் நாள் என்பதினால் அங்கு கூட்டம் மிக அதிகமாக இருக்கும் எனவும் கூறினான்.

அதற்கு முன் ஒரு செய்தி. எனக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னால் ஒரு கனவு வந்திருந்தது. அதில் சிவபெருமான் பார்வதியின் மடியில் தன் தலையை வைத்துப் படுத்து உள்ளது போல காணப்பட்டார். எங்குமே படுத்துள்ள நிலையில் விஷ்ணு மட்டுமே இருப்பார். ஆனால் சிவபெருமான் படுத்துள்ள நிலையில் உள்ளாரா? விடிந்ததும் நான் இன்டர்நெட்டில் சிவன் படுத்து உள்ள காட்சியில் ஆலயம் உள்ளதா எனத் தேடினேன். சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் சுருளிப்பள்ளி என்ற ஊரில் அப்படி ஒரு ஆலயம் உள்ளதாகத் தெரிந்தது. அந்த ஆலயத்தில் உள்ள சிவ பெருமானின் பெயர் பள்ளி கொண்டேஸ்வரர் .

அந்த கனவு வந்து ஐந்து மாதங்கள் ஆகி விட்டன. அதை பற்றி நான் மறந்தே போய் விட்டேன். நாங்கள் திருப்பதிக்கு சென்றபோது நினைவுக்கு வர வழியில் அந்த ஊர் எங்கேனும் தென்படுகின்றதா என பார்த்துக் கொண்டே வந்தேன். அப்படி ஒரு இடம் தென்படவே இல்லை. நாங்கள் திருப்பதியை சென்று அடைந்தோம்.

திருப்பதி மலை அடிவாரத்தில் அழகான சாயி பாபா ஆலயம் இருந்தது. நல்ல சகுனம் என நினைத்தேன். மேலே செல்லச் செல்ல சீரடியில் இருந்ததைப் போலவே வழி எங்கும் கடைகள். பல கடைகளில் பாபாவின் படங்கள். நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் சாயி பாபாவின் படங்கள். கார்களிலும் பாபாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. எங்களுக்கு முன்னால் சென்று கொண்டு இருந்த வண்டியில் பாபாவின் படம். அது எங்களுக்கு வழி காட்டிக்கொண்டே செல்வது போல இருந்தது.

நாங்கள் எங்கள் இடத்துக்கு சென்று தங்கினோம். எங்களை அழைத்துப் போக வந்தவர், தரிசனத்தை மறு நாள் காலை ஏழு மணிக்கு வைத்து உள்ளதாகக் கூறினார். மறு நாள் வியாழக் கிழமை. பாபாவின் நாள். வியாழக் கிழமைகளில் நான் எப்படியெல்லாம் பாபாவை பூசிப்பேன் என மனதில் எண்ணினேன். ஆலயத்துக்குச் சென்று வரிசையில் நின்று ஆலயத்துக்குள் நுழைந்தோம். அது வரை என் மனதில் சாயிராம், சாயிராம் என்ற மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது. உள்ளே நுழைந்த எனக்கு பாபாவின் சமாதி ஆலயத்துக்குள் நுழைவதைப் போன்ற எண்ணம் தோன்றியது. வழியில் சாயிபாபாவின் பெரிய உருவ சிரித்த நிலையில் இருந்தது கண்ணில் பட்டது.

திருப்பதி ஆலயம் மிகவும் பணக்கார ஆலயம். ஆண்டவருக்கு அட்டகாசமாக நகைகளினால் அலங்கரித்து இருப்பார்கள். அந்த புகைப் படங்களையும் நான் பார்த்து இருந்தேன். உள்ளே நுழைந்தால் பகவான் வெறும் வெட்டி மட்டுமே அணிந்த மிக எளிமையான காட்சியில் பாபாவைப் போல காட்சி தந்தவண்ணம் இருந்தார். முழுமையான அமைதி. எனக்கு அவரைப் பார்த்தபோது பாபாவைப் பார்ப்பது போலவே இருந்தது. தரிசனம் முடிந்து வெளியில் வந்ததும் என்னுடைய தாயார் 'உனக்கு பிடித்து இருந்ததா' எனக் கேட்டாள். நான் அவளிடம் கூறினேன் ' அம்மா, நான் சீரடியில் இருந்ததைப் போலவே இருபதாக எண்ணினேன்'.

அறையை காலி செய்துவிட்டு ஊருக்கு கிளம்பினோம். எதிரில் ஒரு பெரிய கார். பாபாவின் படத்துடன்!. எங்களை வழி அனுப்ப வந்தது போல இருந்தது. நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் - சாப்பாட்டு இடம், தேவி ஆலயம் என அனைத்திலும் பாபாவின் படங்களைப் பார்த்தேன். நான் மனதில் நினைத்தேன், ' பாபா நீதானே எனக்கு உறங்கும் சிவனை கனவில் காட்டினாய். இங்கு எவருக்கும் அது உள்ள இடம் தெரியாது. நீ விரும்பினால் அதை எனக்குக் காட்டு' . வண்டியில் ஏறிய நான் தூங்கத் துவங்கினேன். என் ஒன்று விட்ட சகோதரன் வண்டியை வந்த வழியிலேயே ஓடிக்கொண்டு இருந்தான். என்னுடைய தாயார் வழியில் ஒரு இடத்தில் இருந்த சுருளிப்பள்ளி என்ற பெயர் பலகையை படிக்க திடீரென கண் விழித்தேன். நானும் எழுந்து அமர்ந்து கொண்டு என் கனவில் வந்த ஆலயம் எங்கேனும் தென்படுகின்றதா எனப் பார்த்தேன். தூரத்தில் ஒரு ஆலயம் தெரிந்தது. அதில் சிவன் உறங்கும் காட்சியில் இருந்தார். நான் சொல்ல முடியாத மகிழ்ச்சியை அடைந்து வண்டியை உடனே அந்த ஆலயத்தின் முன் நிறுத்துமாறு கூறினேன்.

ஆலயத்தின் வெளியில் பாபாவின் பல படங்கள் காணப்பட்டன. நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். என்னை என்னுடைய பாபா தான் கனவில் காட்டிய ஆலயத்துக்கு அழைத்து வந்து என்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றி விட்டார். ஆலயத்தை அப்டைந்ததும் காரில் இருந்து இறங்கி உள்ளே அவசரம் அவசரமாகச் சென்றேன் . என் கனவில் வந்த அதே காட்சியில் சிவ பெருமான் பார்வதி மடியில் தலை வைத்து உறங்கிக்கொண்டு இருந்தார். அந்த அற்புதக் காட்சியை என் போனிலும் படம் பிடித்துக் கொண்டேன். அந்த ஆலய விவரங்களை சேகரித்துக் கொண்டு அங்கு சற்று அமர்ந்து இருந்துவிட்டுக் கிளம்பினோம்.

என்னை என் பாபா கைவிடவில்லை. மனதார அவருக்கு நன்றி கூறினேன்.
சென்னை திரும்பியதும் என்னுடைய தந்தையும் சகோதரனும் தாங்கள் எப்படி வந்த பாதையை விட்டு விலகி அந்த பாதை வழியே வந்தோம் என்பதை பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தனர். அங்கு சென்ற நான் அவர்களிடம் மெல்ல கூறினேன், 'உங்களை அந்த ஆண்டவன் தன்னைப் பார்க்க வருமாறு அழைத்து இருந்தாரோ என்னவோ' . என் மனது மகிழ்ச்சியால் நிரம்பியது என்பதே உண்மை.

உன் பிரார்தனையை ஏற்றுக் கொண்டு விட்டேன்



உன் பிரார்தனையை ஏற்றுக் கொண்டு விட்டேன்


ராமகிருஷ்ண கோதாரி என்பவர் 1908 ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் பதாரி பிரபு என்ற ஜாதியைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றோர்கள் சீரடிக்கு 1911 ஆம் ஆண்டு சென்றனர். அப்போது பாபா துவாரகாமயியின் வாயிலில் நின்று கொண்டு உடி பிரசாதத்தை விநியோகித்துக் கொண்டு இருந்தார்.அதைக் கண்டவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அன்று முதல் அவர்கள் பாபாவின் பக்தர்கள் ஆயினர். அவர்கள் வீடு திரும்பியதும் சாயி பஜனை மண்டலி ஒன்றை துவக்கினர்.

1913 ஆம் ஆண்டு ராமகிருஷ்ண கோதாரியின் தந்தை நிமோனியா ஜுரத்தினால் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையில் விழுந்தார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறி விட்டனர். ஆனால் அவருடைய மனைவியோ பாபாவிடம் வேண்டினாள்' தன்னுடைய கணவர் குணமாகிவிட்டால் தான் சீரடிக்கு பாத யாத்திரை மேற்கொள்வதாக பிரார்த்தனை செய்தாள்.

பஜனை மண்டலியினர் வந்து பஜனை செய்ய ஆரம்பித்தனர் . இரவு பத்து மணி ஆயிற்று . அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. மருத்துவர் வந்து ஒரு ஊசி போட்டார். இரவு மீண்டும் வந்து அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் எந்த நிமிடத்திலும் இரவு பன்னிரண்டு மணிக்குள் மரணத்தை தழுவ உள்ளார் என்று கூறிவிட்டனர். அதைக் கேட்ட அவருடைய உறவினர் பகவத் கீதையை படிக்கத் துவங்கினர். பஜனை தொடர்ந்தது. அவருடைய மனைவி கதறினாள். 'பாபா என் கணவரைக் காப்பாற்று' என கூறிக் கூறி அழுதாள். இரவு ஒரு மணிக்கு மீண்டும் மருத்துவர் வந்து இன்னொரு ஊசி போட்டார். விடியற்காலை நான்கு மணிக்கு அவர் பிழைப்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. சற்று நேரம் ஆனது, ஆபத்தைக் கடந்து அவர் பிழைத்துவிட்டார்.

ஆகவே அவளுடைய பிரார்த்தனையை நிறைவேட்ற சீரடிக்குச் செல்ல தயாராக இருக்குமாறு பஜனை மண்டலியினர் கூற அவள் அவர்களுடன் சில தினத்தில் சீரடிக்கு கிளம்பினாள். ஐந்து மாட்டு வண்டியில் அவர்கள் முன்னே செல்ல அவளோ அந்த வண்டிகளின் பின்னால் நடந்து செல்லத் துவங்கினாள். அவள் வண்டியில் ஏறவில்லை. கால்கள் வீங்கி விட்டன. சீரடிக்கு சற்று தூரத்தில் ஒரு இடத்தில் இளைப்பாற அமர்ந்தாள். அப்போது வெள்ளை தாடியுடன் அங்கு வந்த மாட்டு இடையர் ஒருவள் அவள் அருகில் வந்து ' உன்னுடைய பிராத்தனையை பாபா ஏற்றுக் கொண்டு விட்டார். போ, வண்டியில் ஏறிச் செல்' என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

ஆனால் அவள் அதற்கு மறுத்து விட்டு நடந்தே சென்றாள்.

துவாரகாமயிக்குச் சென்று பாபாவை தரிசித்தபோது பாபா நானாவிடம் கூறினார் ' நான் இந்த பெண்மணியை வண்டியில் ஏறி வருமாறு கூறியும் அவள் அதைக் கேட்டகாமல் நடந்தே வந்து உள்ளாள். அவள் கால்கள் எத்தனை வீங்கி உள்ளன எனப் பார்த்தாயா. ஆனால் அவை அனைத்தும் இன்று மாலைக்குள் சரியாகி விடும் என்றார். அவர் கூறியது போலவே அன்று மாலையே அவளுடைய காலில் இருந்த காயங்கள் மறைந்தன, கால் வீக்கம் இல்லை. அவள் சீரடியில் தங்கி பாபாவின் உடியை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினாள்.

thanks to http://shirdisaibabatamilstories.blogspot.com/

வேறு

http://www.saibababhajans.com/2009/11/shirdi-mannil-sai-baba-song-in-tamil.html


http://sathyasaibaba.files.wordpress.com/2008/07/original-picture-of-sai-baba-shirdi.jpg


for english http://www.saibabaphotodarshan.com/

http://www.google.co.in/imgres?imgurl=http://sathyasaibaba.files.wordpress.com/2008/07/original-picture-of-sai-baba-shirdi.jpg&imgrefurl=http://sathyasaibaba.wordpress.com/2008/07/06/rare-photographs-of-shirdi-sai-baba/&usg=__xIQ4u9s0rxSupXyhpxKNxjiykjg=&h=599&w=780&sz=84&hl=en&start=12&itbs=1&tbnid=hdfgbzp6oI_-TM:&tbnh=109&tbnw=142&prev=/images%3Fq%3Dsaibaba%2Bof%2Bshirdi%26hl%3Den%26gbv%3D2%26tbs%3Disch:1



www.saibabaofindia.com/shirdi_collection.htm



http://www.google.co.in/imgres?imgurl=http://liveinprayer.files.wordpress.com/2009/03/shirdi_sai2.jpg&imgrefurl=http://liveinprayer.wordpress.com/2009/03/11/shirdi-sai-baba/&usg=__T5K7oiGEJKMFMYzDOXxr1Tedre0=&h=599&w=455&sz=63&hl=en&start=3&itbs=1&tbnid=b6rd6S22AWCflM:&tbnh=135&tbnw=103&prev=/images%3Fq%3Dsaibaba%2Bof%2Bshirdi%26hl%3Den%26gbv%3D2%26tbs%3Disch:1



nice songs for all gods http://liveinprayer.wordpress.com/category/gayatri/

நெருப்பை அணைத்த பாபா


நெருப்பை அணைத்த பாபா

சாயி பாபா எப்படி ஒரு குயவருடைய மகளை நெருப்பில் இருந்து காப்பாற்றினார் என்பதை நீங்கள் படித்து இருக்கலாம். அதனால் அவருக்கு ஏற்பட்ட ரணத்திற்கு பாகோஜி ஷிண்டே என்ற தொழு நோயாளிதான் மருந்து போட்டு துணியால் கட்டுப் போடுவார். சாயி பாபா சில சமயங்களில் கொதிக்கும் பருப்புத் தண்ணீரையோ இல்லை மற்ற வேக வைக்கும் பண்டங்களையோ தன்னுடைய கைகளினால் கிளறுவது உண்டு. அவருடைய கை மருத்துவக் குணம் கொண்டது என்பதினால் அப்படி செய்யப்பட்ட பண்டங்கள் பலருடைய வியாதிகளையும் குணப்படுத்தி உள்ளானவாம் .

ஒரு முறை என்னுடைய தாத்தாவிற்கு ஒரு கனவு வந்தது। அதில் கடாவு மில் தீப்பிடித்து எறிவது போலத் தோன்றிற்று. என்னுடைய தாத்தா அந்த மில்லில்தான் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். சாப்பிடும் போது என்னுடைய தந்தையிடம் அந்த கனவு குறித்து தாத்தா கூற உடனே அதை மில் சொந்தக்காரரிடம் சொல்ல முடிவு செய்தனர். அந்த காலத்தில் எந்த இன்சூரன்ஸ் பாலிசியை எவரும் சாதாரணமாக எடுக்க மாட்டார்கள். என் எனில் இன்சூரன்ஸ் பாலிசிக்கு தரப்படும் கட்டிணம் வரும் லாபத்தைக் குறைத்துவிடும் என்பதினால் இன்சூரன்ஸ் பாலிசியை எவரும் சாதாரணமாக எடுக்க மாட்டார்கள். ஆனாலும் என்னுடைய தாத்தா மில் சொந்தக்காரரான தரம்சி கடாவு என்பவரை சம்மதிக்க வைத்து சற்று அதிக அளவுக்கு இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வைத்தார்.

இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்து முடிந்த அடுத்த ஐந்து அல்லது ஆறாவது மாதம் அவருக்கு மில்லில் தீ பிடித்து விட்டது என அவசர அழைப்பு வந்தது। அவரும் தரம்சி கடாவுவும் பாபாவை வேண்டிக்கொண்டு உடனேயே கிளம்பி அங்கு போய் சேர்ந்த போது மில்லின் நூற்கும் ஆலைப் பிரிவில் தீ மூண்டு இருப்பது தெரிந்தது. அது மில் முழுவதும் பரவி விட்டால் மில் மொத்தமாக அழிந்து விடும் என்பதினால் இரண்டாவது மாடிக்கு சென்று என்ன செய்வது என மனம் பதபதைத்தவாறு பார்த்துக் கொண்டு இருந்தபோது, அந்த எரிந்து கொண்டு இருந்த நெருப்பின் நடுவில் ஒரு பாகீர் போன்ற உருவில் நின்றுகொண்டு இருந்தவர் நெருப்புடன் போராடிக்கொண்டு அதை அனைத்துக் கொண்டு இருந்ததைக் கண்டனர். நெருப்புக்குள் மனிதரா? அது நம் பாபா போல அல்லவா இருக்கின்றது என என்னுடைய தாத்தா வியந்தபோது அடுத்த ஒரு மணி நேரத்தில் நெருப்பு அணைக்கப்பட்டது. நூற்கும் ஆலைப் பிரிவில் மட்டும் சேதம் இருந்தது. ஆனால் அவர்கள் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து இருந்ததினால் ஏற்பட இருந்த நஷ்டம் தவிர்க்கப்பட்டது. அனைத்தும் நன்கு முடிந்ததும் இருவரும் சீரடிக்குச் கிளம்பிச் சென்று பாபாவிடம் நன்றி கூறினர். தன்னுடைய கால்களில் விழுந்த பாபசாஹெப் தாக்கரை தூக்கி நிறுத்திய பாபா கூறினார் ' வயதானவனே, எழுந்திரு . இந்த துவாரகாமாயியில் இருந்து கொண்டு என்னுடைய பக்தர்களுக்கு ஏற்படும் துயரத்தை துடைக்காமல் இருக்க முடியுமா? உலகில் இந்த மூலையில் அவர்கள் இருந்தாலும் என்னை உதவி கேட்டு அழைக்கும் போது நான் அந்த இடத்திற்கு ஓடிச் சென்று அவர்களுடைய துயர் தீர்ப்பேன்'